இசையமைப்பாளர் இளையராஜா ஜுன் 2ம் தேதியன்று அவருடைய 78வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

அவருடைய இசைக்குழுவில் இருக்கும் கலைஞர்கள் அவருக்காக இசை வாழ்த்தையே கொடுத்திருக்கிறார்கள். வருடா வருடம் பிரசாத் ஸ்டுடியோவில் அவருடைய இசைக்கலைஞர்கள் அனைவரும் அவருக்கு இசையால் ஒரு வாழ்த்து இசைப்பார்கள். இவ்வருடம் கொரோனா என்பதால் நேரில் சந்திக்க இயலாததால் காணொலி காட்சி மூலம் அவருடைய சில பாடல்களை இசைத்து அவருக்கு வாழ்த்து சொல்லியுள்ளனர். அதை வீடியேவாக்கி இளையராஜாவின் யு டியூப் சேனலில் பதிவேற்றி இருக்கிறார்கள். 

இளையராஜாவுக்கு ‘ஹேப்பி பர்த்டே’ பாடிவிட்டு அவருடைய இசையில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல்களை தேர்ந்தெடுத்து குழுவினர் வாசித்துள்ளார்கள். அவற்றை இளையராஜா அவற்றை ரசித்துக் கேட்டுப் பாராட்டியுள்ளார்.

நிகழ்ச்சி முடிந்ததும் தன் இசைக் கலைஞர்களுக்கு ‘மாஸ்க்’ போடாமல் வெளியில் செல்லாதீர்கள் என அறிவுரை வழங்கிய இளையராஜா வாழ்த்திய தனது இசைக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

அந்தக் காணொலி கீழே..

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.