சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து முடிவடைந்துள்ள படம் அண்ணாத்த. படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெறுகின்றன.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட இப்படத்தில் ரஜினியுடன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, யோகி பாபு, ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டு தடைப்பட்ட நடந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. திருவிழா பின்னணியில் கோயில் மணிகள், அரிவாள்கள் நிறைந்து இருக்க, பட்டு வேஷ்டி, சட்டையில் கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்

இன்று மாலை அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவும் வெளியாகி உள்ளது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.