சித்ரா ராமகிருஷ்ணா. இந்திய தேசிய பங்கு சந்தையின் முதல் பெண் நிர்வாக இயக்குனராக பிஜேபியால் நியமிக்கப்பட்டவர். இவர் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். என்ன காரணம் ?

1.75 லட்சம் கோடி ஊழல் குற்றசாட்டு காரணமாக இப்போது சிபிஐ வசம் இருக்கிறார். கண்டிப்பாக இவர் தண்டிக்கபடமாட்டார்.ஏனெனில் ஏன் ஜெயலலிதா தண்டிக்கப்படவில்லை ஏன் சசிகலா தண்டிக்கப்பட்டார் என்பதில் இருக்கிறது அதற்கான காரணம்.

இந்த ஊழல் ராணி தன்னுடைய(நிர்வாக) அன்றாட நடவடிக்கைகளை ஒரு ”சித்தபுருஷருக்கு” மெயில் அனுப்பி இருக்கிறார். அவர் சொல்லிய சில முடிவுகளை இந்த தேசத்தின பங்கு சந்தையில் திணித்திருக்கிறார். முன்கூட்டியே பல செபி தகவலக்ளை அவருக்கு சொல்லியிருக்கிறார். இதனால் சில செயற்கை இழப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார். ஒரு முறை அல்ல பலமுறை. ஒவ்வொரு முறையும் பல கோடிகள் இழப்பு. அவர் யார் என தெரியாது என சொல்கிறார். அவர் ஒரு சாமியார் என்கிறார். என் வாழ்வில் எல்லா முடிவுகளையும் அவரை கேட்டுதான் செய்வேன் என்கிறார்.

கூடுதலாக சுப்பிரமணி என்பவருக்கு சம்பளத்தை வாரி வழங்கி இருக்கிறார். அதாவது ஆண்டுக்கு 15 லட்சம் சம்பளத்தில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு இருந்த சுப்பிரமணியத்தை தன் உதவியாளர் ஆக்கி முதலிலே 1.5 கோடி கொடுத்து பின்னர் நான்காண்டுகளில் 4.5 கோடி என்றளவில் அவருக்கு மட்டும் சம்பளம் அதிகரித்திருக்கிறார். அந்த சுப்பிரமணியோ தன் சம்பளத்தில்; 15% முதல் 25% வரை அந்த சித்த புருஷ்க்கு கொடுத்திருக்கிறார். இதில் பெரிய காமெடி என்றால் அவரை இருவருமே சந்தித்தது இல்லை என்கிறார்கள் .அவரை உணரத்தான் முடியும் என்கிரார்கள்.

அப்படி உணரமட்டுமே முடிந்த சாமியாரோடு இந்த ஊழல் ராணி சித்ரா செஷல்ஸ் தீவில் விடுமுறை கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதைவிட முக்கியம் சித்ரா தமிழர். அந்த சித்த புருஷருனும் தமிழர். இருவரும் பல மெயில்களில் பக்தி இலக்கியங்களில் உள்ள காமத்தை பறிமாறியிருக்கிறார்கள். அது குறித்து பேசி நாமும் அப்படி என்றெல்லாம் உருகி இருக்கிறார்கள்.

பங்கு சந்தையின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவரின் ஆசிப்படியே நடந்திருக்கிறது. இந்த ஊழலை வெளியே கொண்டுவந்தது ஒரு தனியார் நிறுவனமே. அவர்களின் மெயிலை வேவு பார்த்து வெளியே கொண்டுவந்தது. செபியின் மற்ற துணை நிறுவனங்கள் இதில் இணைந்துகொள்ள வேறு வழியின்றி நீதிமன்றத்தில் ஆமை வேகத்தில் நகர்கிறது இந்த வழக்கு.

இந்த வழக்கு குறித்து ஊடகங்கள் பெரிதாக பேசவில்லை. எழுதவில்லை. 1.75 கோடி ஊழல் ஊழல்ராணி கைது இன்றைய தமிழ் இந்துவில் கடைசி பக்கத்தில் யாரோ சித்ரா கைதாம் என்றளவில் இருக்கிறது.

இதுகுறித்து எச்சை ராஜாவோ, சசிகலாவை திருட்டு பொறுக்கி என சொன்ன பத்ரியோ சேகரனோ குருமூர்த்தியோ பேசவே இல்லை. பேச மாட்டார்கள். காரணம் இங்கே யார் செய்தால் ஊழல் என்பதில் பார்ப்பனிய கூட்டம் தெளிவாக இருக்கும். இந்த தேசத்தின் முதல் ஊழல் பார்ப்பனியம் தான். இந்த தேசத்தில் பதவியில் இருக்கும் போது ஊழலில் கைதானதும் பார்ப்பனியம் தான். கொலையும் பார்ப்பனியம் தான். அரசியல் கேவலங்களும் பார்ப்பனியம் தான். ஆனால் அது நமக்கு பாடமெடுக்கும். நாமும் ஆமாம் ஊழல், ஆமா தகுதி, ஆமா தேஷ்பக்தி அவன் கால கழுவிட்டு இருப்போம்.

இந்தியாவில் ஆயிரம் கட்சிகள் இருக்கலாம். பல சித்தாந்தங்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படை ஒன்றுதான். ஒன்று பார்ப்பனியம் இன்னொன்று பார்ப்பனிய எதிர்ப்பு. இது புரியாத வரை சித்ராக்கள், ஏ1 ஜெயலலிதாக்கள் இங்கே புனிதங்கள் தான்.

பா. சரவணகாந்த்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.