நடிகர் பிருத்விராஜ் தயாரித்து கதாநாயகனாக நடித்த ‘ஜன கண மன’ என்ற மலையாள திரைப்படம் வெளியாகியுள்ளது.
RSSன் முஸ்லீம் வேட்டைக்கு தென்னிந்திய ஆய்வகமான கர்நாடகா பின்னணியில் முஸ்லிம் பெண் பேராசிரியர் கொல்லப்பட்டதை சுற்றி பின்னப்பட்டுள்ள கதை.
சினிமா ஊடகங்களை சங்கி மதவாதம் முழுவதுமாக ஆட்கொண்ட இந்த அவல காலத்தில் RSS ஐ சரியான நிலையில் காட்சிப்படுத்தி திரைப்படம் எடுக்கும் இவரின் தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
“பிரச்சனை செய்பவர்கள்” உடையை வைத்து அடையாளம் காண முடியும் என்ற நரேந்திர மோடியின் கோட்பாட்டை திரும்பத் திரும்ப விமர்சிக்கும் இந்த படத்தில் மாட்டிறைச்சி கொலைகள், பணமதிப்பிழப்பு மற்றும் முஸ்லீம் எதிர்ப்பு கலவரங்கள் ஆகியவை காட்டப்பட்டுள்ளன
BJP பெயரை சொல்லவில்லை என்றாலும் RSSன் காவி கொடி, ABVP கொடி எல்லாம் தீமையின் பக்கம், பாசிச எதிர்ப்பு பேனர்கள் நல்ல பக்கம் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இந்த நாடு எவன் அப்பனுக்கும் சொந்தம் இல்லனு சுத்த மலையாளத்துல தெளிவா சொல்லிருக்காங்க.
ஒரு வழக்கமான வணிகப் படம். ஆனால் ஆர் எஸ் எஸ் சங்கி எதிர்ப்பு படங்களுக்கும் சமுதாயத்தில் ஏற்பு உண்டு என்பதை நிரூபித்து ஊக்குவிப்பது அனைத்து மதசார்பற்ற விசுவாசிகளின் பொறுப்பாகும்.
சினிமா ஹராம் என்ற கோட்பாட்டு பிடிவாதங்களை ஒதுக்கி வைத்து இந்த படத்தை காசு கொடுத்து பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும். இது போன்ற பல படங்களை வெளியிட ஊக்கமாக இருக்கட்டும். இஸ்லாமோபோபிக் திரைப்படங்கள் செய்யும் பிரச்சாரங்களுக்கு இதுபோன்ற படங்கள் பதிலடியாக இருக்கட்டும்.
சில நேரங்களில் சில திரைப்படங்கள் பார்ப்பது கூட நல்ல புத்தகங்களை படிப்பது போன்ற அறிவார்ந்த கடமையாகும்!
–பஸிருதீன் வல்லஞ்சிரா