ஹாலிவுட் பாணியில், பிரபல நடிகர்கள் ஆல்பம் வெளியிடுவது கோலிவுட்டிலும் ட்ரண்ட் ஆகிவிட்டது.

விஜய் பட ஐடியா, சிவகார்த்திகேயன் ஸ்டைல் பாடல் வரிகள் என புதுவிதமாக, ‘லவ் யு பேபி’ என்ற ஆல்பம் பாடல் ஒன்று உருவாகியிருக்கிறது.

அனுகிரஹா எண்டெர்டெயின்மெண்ட்ஸ் S காமாட்சி கனிமொழி தயாரித்துள்ளார்.

 

இளைஞர்களின் பல்ஸ் அறிந்து கன்டென்ட் புடித்திருக்கும் பிரசாத் ராமன் இந்தப்பாடலை அட்டகாசமாக இயக்கியிருக்கிறார்.

பிரபல நடிகர் ப்ரேம்ஜி அமரன். பாடியுள்ளார். நடிகர் சந்தோஸ் பிரதாப் நடித்துள்ளார். சமீபத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த, சர்பட்டா பரம்பரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சந்தோஸ் பிரதாப் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஐரா தோன்றுகிறார்.

இப்பாடலில் ஷாஜகான் படத்தில் விஜய் காதலர்களை சேர்த்து வைப்பது போல ஒரு கான்செப்டை பாடலுக்குள் வைத்திருக்கிறார்கள். காதலர்களை சேர்த்து வைப்பவராக ராகுல் தாத்தா அசத்தி இருக்கிறார்.

இந்தப்பாடலை தனது தனித்துவ இசையால் அழகுப்படுத்தி இருக்கிறார் இசை அமைப்பாளர் ராக்கேஷ் அம்பிகாபதி.

“டசக்கு டசக்கு”, “வா மச்சானே” ஆகிய மெகா ஹிட் பாடல்களை எழுதிய முத்தமிழும், பிரசாத் ராமனும் இந்தப்பாடலை எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவு செய்திருப்பவர், சந்தோஷ் பாண்டி.

ரிச்சட் கிறிஸ்டோபர் நடனம் அமைத்துள்ளார்.

திரையுலகில் பிரபலமானவர்கள் சேர்ந்து உருவாக்கி உள்ள இந்த ஆல்பம் வரும் 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.