கோவையின் குடிநீர் விநியோகம் பிரான்சின் சூயஸ் கம்பெனிக்கு ₹3100 கோடிக்கு 30 வருசம்னு தாரை வார்த்தபோதே சொன்னோம் ஊர்ல இனி சொந்தமா போர்வெல்லோ கிணறோ வச்சிக்க முடியாது என்று.

அவன் தண்ணினு எவ்ளோ தரானோ, எவ்ளோக்கு தரானோ வாங்கி குடிக்கனும். அதும் தந்தப்பவே அந்த நிறுவனம் ஆர்டிஐ கீழ வராதுனு தெளிவா சொல்லி தந்திருக்காங்க. அவன் போட்ட பணத்த பல மடங்கு எடுக்க என்ன வேணும்னாலும் செய்வான்.

அடுத்து சில வருடங்களுக்கு முன்னாலயே ஒன்றிய அரசு தண்ணீரை பொது பிரிவில் இருந்து வணிக பயன்பாட்டு பிரிவில் கொண்டுவந்தபோதே இப்டிதா வரும்னு சொன்னோம்.

கடைசியா எங்க வரணுமோ அங்க வந்தாச்சு.

இப்பகூட பலர் ஐயோ ₹10000 கட்ட சொல்றானேனு பொங்கறாங்க. விசயம் அது மட்டுமல்ல. அப்படி கட்டி கணக்குல சேத்தப்புறம் அதுல ஒரு மீட்டர் மாட்டி நாம நம்ம கிணத்துல எடுக்கும் தண்ணீர் அளவுக்கு காசு புடுங்குவாங்க.

இப்பவுள்ள நவீன தொழில் நுட்பம் கொண்ட மீட்டர் மூலம் நாம் நம்ம கிணற்றில் போர் வெல்லில் எவ்வளவு தண்ணீர் எடுக்கிறோம் என்று அவன் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

உன் வீட்டு போர் ல் அதிகம் தண்ணீர் எடுத்துட்ட அதனால் பணம் கட்டு, இல்ல போர்வெல்ல மூடுடானு நிப்பாங்க. இன்னும் சொல்ல போனால் ஒரு அளவுக்கு மேல் நம்ம வீட்டு போரில் தண்ணீர் எடுத்தால் அவங்களே அதை நிப்பாட்டி விடுவாங்க..

இது எப்படி சாத்தியம் என்று கேற்குறீங்களா?

ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீர் எடுக்க பட்ட பின் water flow meter இல் இருக்கும் sensor மின்சார மோட்டார் மின் இணைப்பை துண்டித்து விடும்.. மீண்டும் நாம் ஆன்லைன் இல் பணம் கட்டிய பின்னர் தான் pump மோட்டார் on ஆகும்.

இதற்கான தொழில் நுட்பம் எல்லாம் எப்பவோ ரெடி.

இது கூட நம்ம டிஜிட்டல் இந்தியாவுல ஒரு டிசைன்தான்.

தங்க நாற்கரசாலைனு வந்தப்ப ஆஹா ஓஹோன்னோம் இப்ப டோல் கம்பெனி எவ்வளோ சொல்றானோ கட்டிட்டு சரிங்க சாமினு போறோம்ல அதே போல தான்.

கோவை மட்டுமல்ல ஈரோடு கூட அபெக்ஸ் கம்பெனிக்கு (பெக்டெல் கம்பெனி பினாமி) தாரை வார்த்து பலவருசமாச்சு. இனி ஒவ்வொரு நகரமா வித்துடுவாங்க.

அதனால அவங்க என்ன சொன்னாலும் நாம கேட்டுதா ஆகனும்.

இதை எல்லாம் யாரும் யோசிக்க கூடாது என்று தான் இந்து மதத்துக்கு ஆபத்து, மதத்தை இழிவு படுத்தி விட்டான், மசூதிக்கு கீழே சிவலிங்கம் இருக்கு, பசு மாடுகளுக்கு ஆபத்து, நபிகள் நாயகத்தை இழிவு படுத்தி விட்டான், என்று மக்களை திசை திருப்பி அவர்களை பதட்ட நிலையிலேயே வைத்து பொங்க வைத்து கொண்டே இருப்போம்.

ஆப் கி பார், கோவணத்தை உருவும் சர்க்கார்.

வாட்ஸப் பகிர்வு.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.