சங்கிகள் நாம் சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே மொழிவாரி மாநிலங்களை எதிர்த்து வந்துள்ளனர். சாஃப்ட் சங்கி காங்கிரஸும் அப்படியே நினைத்தது.

ஆந்திரா என்கிற மொழிவாரி மாநிலம் வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து, அரசு செவிசாய்க்காததால் தன் உயிர் நீத்தார் பொட்டி ராமுலு. உடன் ஆந்திராவே கொதித்தெழுந்தது‌. வேறு வழியின்றி நேரு மொழிவாரியாக ஆந்திராவை பிரித்தார். மொழிவாரியாக பிரிந்த முதல் மாநிலம் ஆந்திராவே.

தமிழ்நாடு , கர்நாடகா, கேரளாவை சேர்த்து மதராஸ் மாகாணப் பகுதிகளை தக்ஷின் பிரதேஷ் என்று பெயர் வைக்க ஒன்றிய அரசு அப்போது நினைத்தது. முதல்வராயிருந்த காமராஜர் அதை கடுமையாக எதிர்த்தார்.

தமிழ்நாடு என்று பெயர் வைக்க சொல்லி விடுதலைப் போராட்ட தியாகி சங்கரலிங்கனார் 1956ல், விருதுநகர் தேசபந்து மைதானத்தில், 72 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அத்தோடு 11 கோரிக்கைகளும் இருந்தன. அதில் தமிழ்நாடு கோரிக்கையை நிறைவேற்ற அண்ணா உறுதி பூண்டார்.
காங்கிரஸ் தியாகியான சங்கரலிங்கனார் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாத காங்கிரஸ் மேல் வெறுப்பு கொண்டு தான இறந்தபின் தனது உடலை கம்யூனிஸ்ட் தலைவர் மாயாண்டி பாரதியே பெற்று இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்று எழுதி வைத்து இறந்தார்.

மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது எல்லா மாநிலங்களும் மொழிவாரியாக பிரிக்கக் கூடாது என்று தான் காங்கிரஸ் நினைத்தது.

அண்ணா 57ல் எம்எல்ஏவாக இருந்தபோது சென்னை மாகாண சட்டசபையில் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அது அப்போது தோற்கடிக்கப்பட்டது. இது போல் 3 முறை சட்டசபையில் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. 

60 களில் கம்யூனிஸ்ட் தலைவர் நாடாளுமன்றத்தில் பி.ராமமூர்த்தி தமிழ்நாடு என்று பெயர் வைக்க தீர்மானம் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து முன்மொழிந்தார் மே.வங்கத்தில் உள்ள கம்யூனிஸ்ட் எம்பி ஒருவர்.

அப்போது நடைபெற்ற விவாதத்தில் தமிழ்நாடு என்று பெயர் வைப்பதால் நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்று காங்கிரஸ் கேட்டது. பார்லிமெண்ட்டை லோக்சபா என்றும், Council Of States என்பதை ராஜ்யசபா என்றும் President ஐ ராஷ்டிரபதி என்றும் பெயர் மாற்றியதால் நீங்கள் என்ன சாதித்தீர்களோ அதையே தான் நாங்கள் சாதித்திருக்கிறோம் என்றார் அண்ணா‌.

இறுதியாக 1967ல் அண்ணாவே ஜெயித்து திமுக கட்சி சார்பில் தமிழ்நாட்டு முதலமைச்சரானார். அப்போது மீண்டும் தமிழ்நாடு பெயர் வைப்புத் தீர்மானம் கொண்டு வந்து தமிழ்நாடு என்று தமிழ்நாட்டிற்கு பெயர் சூட்டப்பட்டது.

இப்படி எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகளுக்குப் பின் தான் தமிழ்நாடு என்று பெயர் வந்தது.

எனவே சங்கிகள் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றில் ஆதாரம் கேட்கும் முன் கடந்த 50 ஆண்டுகால போராட்டத்தை பார்க்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ் இந்தியா விடுதலை அடைந்த போது மாநிலங்கள் என்ற பிரிவினைகளே கூடாது என்றது. அனைத்து பகுதிகளையும் மாநகராட்சிகள் போல் பெரும் மண்டலங்களாகப் பிரித்து ஆளவேண்டும் என்று காங்கிரஸூம் முயன்றது. ஒரே நாடு ஒரே ஆட்சி என்று அப்போதே ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் கட்டுரை எழுதினார். அதாவது நேரடியாக இந்திய அரசு டெல்லியில் இருந்தே ஆளும். மாநிலம் , மாவட்டம், என்று எதுவுமே கிடையாது. நேராக கிராம முன்சீப்புகளை வைத்து நாட்டை ஆளும் என்றார்‌. அதன் வேறு வடிவம் தான் இப்போது கலெக்டர்கள் நாடெங்கும் இருப்பது.

தற்போது இந்தியாவெங்கும் உள்ள கலெக்டர்கள் ஒன்றிய அரசின் பணியாளர்கள். அவர்கள் தான் நேரடியாக இந்தியாவின் எல்லா மூலை முடுக்கையும் ஆள்பவர்கள்.

மாநிலங்கள் கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டதால் மாநிலங்கள் உருவாக்கப்பட்டாலும் இன்றுவரை மாநிலங்களின் முதலமைச்சர்கள் அமைச்சர்கள் எல்லோரும் நேரடியாக மாநிலத்தை ஆள்வதில்லை. அந்தந்த பகுதியில் உள்ள ஐஏஎஸ் கலெக்டர்களே ஆள்கின்றனர். மாநில முதல்வர்களால் கூட ஐஏஎஸ் கலெக்டர்களை பதவி நீக்கம் செய்யவோ, இடம் மாற்றம் செய்யவோ முடியாது. ஒன்றிய அரசிடமிருந்து உத்தரவு வந்தால் மட்டுமே இவை நடக்கும்.

இதுதான் இன்றைக்கும் நடைமுறை.

எனவே தான் பாஜக ஆட்சிக்கு வந்ததும் பழையபடி ஒரே நாடு ஒரே ஆட்சி , ஒரே காவல்துறை ஒரே யூனிபார்ம்,ஒரே ஆதார் கார்டு , ஒரே ஜிஎஸ்டி , ஒரே ராணுவம் , ஒரே ரேஷன் கார்டு, ஒரே மொழி இப்படி எல்லாவற்றிலும் ஒரே என்கிற தன்மையை மீண்டும் திணிக்கிறது. 533 சமஸ்தானங்களாக இருந்த இந்தியாவை இணைத்து தான் 1947ல் சுதந்திர இந்தியா உருவாக்கப்பட்டது என்கிற உண்மையை மறந்து விட்டதால் தான் இந்த இழிவு நிலை.

இப்படித் திணிப்பதன் மூலம் மீண்டும் மாநிலங்கள் பிரிந்து போவதைத் நோக்கித்தான், மாநிலங்களையும் அதன் மக்களையும் திணிக்கும்.

சோவியத் யூனியன் சிதைந்து பல நாடுகளாகப் பிரிந்து போனதன் முக்கிய காரணங்களில் ஒன்று ரஷ்யா ரஷ்ய மொழி மட்டுமே என்று பிற மாநிலங்களின் மொழிகளை,  இனங்களை, அடையாளங்களை கலாச்சாரங்களை தூக்கி எறிந்ததே.

எனவே சங்கிகள் செய்யும் செயலானது ஒரே இந்தியாவை உருவாககுவதற்குப் பதிலாக மாநிலங்களை பிரிந்து போகவே வழி செய்யும்.

இந்தியா எப்போதும் ஒற்றை கலாச்சாரம் கொண்ட நாடாக இருந்ததில்லை. பல்வேறு கலாச்சாரங்களும் , மொழிகளும் இனங்களும் கொண்ட நாடுகள் சேர்க்கப்பட்டு தான் இந்தியாவே உருவானது. அதனால் தான் இந்தியா மதச் சார்பற்ற கூட்டாட்சி தத்துவத்தை முன்னிறுத்துகிறது.

மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது இத்தகைய அதிகாரப் பங்கீட்டை வலியுறுத்தவே.

இந்த உண்மைகளை புதைத்துவிட்டு இந்தி இந்தியா என்று பாஜக இறங்கினால் அது நாளை இந்தியாவையே உருக்குலைத்து விடும்.

பம்பாயை மும்பை என்றும்,
பெங்களூரை பெங்களூரு என்றும்
மெட்ராஸை சென்னை என்றும்,
calicutஐ கொல்கத்தா என்றும்,
குர்காவூனை குருகிராம் என்றும்
ஏன் பெயர் மாற்றினீர்கள் என்று கேட்டால் சங்கிகள் என்ன பதில் சொல்வார்களோ,
அதே தான் தமிழ்நாடு என்று ஏன் பெயர் வைத்தீர்கள் என்ற கேள்விக்கும் பதில்.

தமிழ்நாடு. அடையாளம். நம் அடையாளம். தமிழர் அடையாளம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.