மூன்று நண்பர்களை பற்றிய படம் தான் ஜிகிரி தோஸ்த். நண்பர்கள் என்பதால் அவர்கள் அடிக்கும் லூட்டி பற்றிய ஜாலியான படம் இது என்று நீங்கள் நினைத்தால் அது தான் தவறு. இது காமெடி படம் அல்ல த்ரில்லர்.
ஷாரிக் ஹசன், அரண், விஜே ஆஷிக் ஆகியோர் நல்ல நண்பர்கள். அவர்களை சுற்றியே கதை நகர்கிறது. படம் துவங்கிய வேகத்தில் காமெடி டோனில் இருந்து சீரியஸான த்ரில்லருக்கு மாறிவிடுகிறது. ஆனால் காமெடியும் சரி த்ரில்லரும் சரி ஜிகிரி தோஸ்துக்கு கை கொடுக்காமல் போய்விட்டது.
நிறைய விஷயத்தை சொல்ல வந்து எதையும் முழுவதுமாக சொல்ல முடியாமல் போய்விட்டது. படத்தில் நல்ல விஷயங்களும் இருக்கிறது. அஸ்வின் விநாயகமூர்த்தியின் பின்னணி இசை தான் படத்திற்கு பெரிய பலமே. காட்சிகளை விட பின்னணி இசை மூலம் திகிலூட்டியிருக்கிறார்கள். மூன்று நண்பர்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பவர் லோகியாக நடித்திருக்கும் விஜே ஆஷிக்.
அடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதில் கணிக்க முடிகிறது. ஒரு கட்டத்தில் கணிக்கும் மூடும் போய்விடுகிறது.