அந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு சம்பவம் சில நாட்களுக்கு முன்பு அரங்கேறியிருக்கிறது.

என்ன நினைத்தாரோ விஜய் திடீரென்று ‘லிங்கா’வை வாங்கிய சிங்காரவேலன் தலைமையிலான கோஷ்டியை ஒரு பிரியாணி விருந்திற்கு அழைத்திருக்கிறார் விஜய்.

விருந்தைப் பரிமாறும் வேலையையும் தானே செய்த விஜய், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே “ உங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டாம்னு நான் எங்கப்பா சொன்னேன்,” என்று சிரித்துக் கொண்டே கேட்க, “நாங்கள் ரெண்டு பெரிய ஹீரோக்கள்னு தான்னு சொன்னோம்,உங்களையும் சரத்குமாரையும் சொல்லல,” என்று பதிலுக்கு சிங்காரவேலனும் சிரித்துக் கொண்டே சொன்னாராம்.

இந்தப் பிரச்சனையால் எங்களுக்கு யாரும் படம் தர மாட்டார்கள் போலத்தெரிகிறது என சிங்காரவேலன் கூற, ‘அப்படியெல்லாம் இல்லங்கண்ணா, ‘புலி’ படத்தின் திருச்சி வினியோக உரிமையை வேண்டுமானால் நீங்க வாங்கிக்கங்கண்ணா,” என்று விஜய்யும் பதிலுக்கு சொல்ல உடனே தன்னுடைய பி.ஆர்.ஓ பி.டி.செல்வகுமாரை கூப்பிட்டு ‘புலி’ படத்தின் திருச்சி ஏரியாவை சிங்காரவேலனுக்கே கொடுங்கள் என்று உத்தரவு போட்டிருக்கிறார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்களோ கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு தலைவராக இருப்பவர் என்பதற்காகவாவது வேண்டாம். சக நடிகர் ஒருவரை இவ்வளவு கேவலப்படுத்தியிருக்காரா..? அதற்காகவாவது சிங்கார வேலனை விஜய் கண்டித்திருக்க வேண்டாமா என்று அடங்காத ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.

அதோடு லிங்கா வினியோகஸ்தர்களின் தவறுதலான வழிமுறையை எதிர்த்து ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் ரஜினிக்கு ஆதரவாக குவிய ஆயத்தமாகி கொண்டிருந்த வேளையில், சூப்பர் ஸ்டார் ரஜினி வினியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க முன்வந்து, நிலைமையை வழக்கம்போல் சற்று குழப்பத்துக்கு ஆளாக்கி வைத்திருக்கிறார்.

எப்பிடியிருப்பினும் விஜய்க்கு எதிராக ரஜினி ரசிகர்கள் பிரியாணி விழா எடுக்கும் நாள் விரைவில் வந்தே தீரும் என்கிறார்க>