பல முன்னணி கதாநாயகர்களின் காதல் நாயகியாக வலம் வந்தவர் சிம்ரன். தனது அழகிற்கு ஏற்றார்போல் அதித திறமையுடையவர் என கூறப்பட்டவர்.  சினிமாவில் உச்சத்திலிருக்கும் போதே திருமணம் செய்துகொண்டு சினிமாவிற்கு பை!!! பை!!! கூறினார்.  சில வருடங்களுக்குப் பின் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஹாய்!!! ஹாய்!!! கூறி களமிறங்கியுள்ளார்.

GV பிரகாஷ், ‘கயல்’ அனந்தி நடிக்கும் ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

“எனனிடம் இயக்குனர் ஆதிக் இக்கதையைக் கூறினார்.  படத்தில் முக்கியமான எனது கதாப்பாத்திரம் புதியதாய் இருக்கிறது. படப்பதிவு அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்நிலையில் எனது கதாபாத்திரத்தை பற்றி அதிகமாய் சொல்லக்கூடாது. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மூலம் என்னை மீண்டும் வெள்ளித்திரையில் காண எனக்கே பெரும் ஆவலாய் உள்ளது” என்று புன்னகையுடன் விடைபெற்றார் சிம்ரன்.

Related Images: