ஆர்வம், கனவு , திறமை இம்மூன்றுக்கும் வாய்ப்பிற்கும் உண்டான இடையில் இருக்கும் இடைவெளியை ‘உழைப்பு’ என்ற வார்த்தை பாலமாய் அமைந்து இணைக்கிறது.

ஜீ,கே. சினிமாஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கத்தில் வெளிவர தயாராகி வருகிறது ‘பட்ற’ திரைப்படம். வைதேகி, சாம் பால், புலிபாண்டி என புதுமுகங்களுடன் கதாநாயகனாக அறிமுகமாகிறார் மிதுன்.

“சிறு வயது முதலே சினிமா என்றால் ஆர்வம் அதிகம். நடனம் , நடிப்பு என பல்வேறு விதமான பயிற்சிகளை மேற்கொண்டேன். ஒரு பிரபல சினிமா ஆல்பத்தில் எனது புகைப்படத்தை பார்த்து என்னை இயக்குனர் ஜெயந்தன் அழைத்தார். எனது நடிப்பு மற்றும் உடல் கட்டமைப்பும் இந்த
கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக இருக்கும் என்றுக் கூறி உடனே ஷூட்டிங் ஆரம்பித்தார். க்ளைமாக்ஸ் பகுதி தனியாய் படப்பிடிப்பு செய்யப்பட்டது. ”

“இறுதி சண்டைக் காட்சிகாக எனது உடற்கட்டை மேம்படுத்த வேண்டியிருந்தது. தீவிர உடற் பயிற்சி மேற்கொண்டேன். ஷூட்டிங்கிற்கு சில நாட்கள் உள்ள நிலையில் எனது குடும்பத்தில் அனைவரும் ஒரு சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்தனர். இதையறிந்த
இயக்குனர் ஜெயந்தன் படப்பிடிப்பை நிறுத்தினார். முழு ‘பட்ற’ குழுவும் எனக்கு மிகவும் பக்க பலமாய் இருந்தனர். நானும் மருத்துவ மனையில் இருந்துகொண்டே எனது உடற்பயிற்சிகளை தொடர்ந்தேன்”

“க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ஒரு பெரிய மரப் பலகையால்  பின் மண்டையில் அடி வாங்க வேண்டும் என்றார் சண்டை பயிற்சியாளர் ‘மிரட்டல்’ செல்வம் கூறினார். அடிப்பவர் கையில் உண்மையான மரப்பலகை பார்த்த உடனே எனக்கு பயம் வந்து விட்டது. இயக்குனரிடம் ‘டூப்
போட்டுக்கலாமா’ என்று கேட்டேன். இந்த காட்சி யதார்த்தாமாக அமைய வேண்டும் என்று கூறி ஊக்கப்படுத்தினார். அக்காட்சியும் நன்றாக வந்திருக்கிறது . ஓர் நடிகனாக என்னை வளர்த்துக்கொள்ள ‘பட்ற’ படக் குழுவினர் மிகவும் உதவினர். எனது தயாரிப்பாளர் காந்தி குமார், இயக்குனர் ஜெயந்தன் மற்றும் அனைத்து குழுவினர்க்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கொங்குதமிழ் வாசம் பொங்க மிதுன் கூறினார்.

ஸ்டில்ஸை பார்க்கும் போது நீங்க நல்லா எக்ஸர்ஸைஸ் பண்றது தெரியுது. நடிப்பிலும் அதே அளவுக்கு எக்ஸர்ஸைஸ் பண்ணிக்கோங்க மிதுன். அது இன்னும் முக்கியமானது.

Related Images: