அறிமுக இயக்குனர் நிமேஷ்வர்ஷன் சுதாஸ் புரொடக்ஷனின்  தயாரிப்பில் ‘திறந்திடு சீசே’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் . இவர் இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக இருந்தவர்.  தயாரிப்பாளர் ‘வீரவன் ஸ்டாலின்’ இப்படத்தை தயாரிப்பதோடு கதையின் நாயகனாகவும் அறிமுகமாகிறார்.

“துணிவான ஒரு கதையை தயாரிக்க முன் வந்ததோடு , மற்றவர் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று திறம் பட நடித்த வகையில் அவருக்கு என் நன்றி.  தன்ஷிகா ஒரு திறமையான நடிகை என்பதை நிரூபிக்கப் போகும் ஒரு நடிப்பை இந்தப் படத்தில் அவர் வழங்கி உள்ளார். சி எஸ் கே படத்தில் நடித்த நாராயண் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து உள்ளார். ”  என்றார் இயக்குனர் நிமேஷ்வர்மன்.

அஞ்சனா கீர்த்தி நாயகியாக அறிமுகமாக ,குளஞ்சி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, விஜய் படத்தொகுப்பில், மோகன்ராஜன் வரிகளில் கணேஷ் ராகவேந்திரா  இசையமைத்துள்ளர்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு அலாவுதீன் விளக்கு போல அவர்களுக்குள் இருக்கும் பூதம் அவ்வப்போதுதான் வெளி வரும். அந்த தருணம் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு என்ன நன்மை தீமைகள் நடக்கிறது என்பதை சுவாரசியம் நிறைந்த திருப்பங்களுடன் காட்சிப் படுத்துகிறது ‘ திறந்திடு சீசே ‘. நகைச்சுவை கலந்த  த்ரில்லர் இது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

Related Images: