அரவிந்த் கேஜ்ரிவாலுக்குப் பிடித்த ‘ரமணா’

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெற்றிபெற்ற ரமணா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் பண்ணி ‘கப்பர் இஸ் பேக்’ வெளியிட்டார்கள். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

ஒரு கல்லூரி புரபஸர் தன்னிடம் படித்த பழைய மாணவர்கள், நல்லெண்ணம் படைத்தவர்களின் துணையுடன் சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களை ஒழித்து, தீயவர்களை சட்டத்தில் மாட்டவைத்து, சமூகத்தை சீர்திருத்துவதாக வரும் கதை.

கப்பரில் ரமணாவாக நடித்திருப்பவர் அக்ஷய் குமார். ஹிந்திப் படத்தின் இயக்குனர் க்ரிஷ் முருகதாஸின் கதையை அப்படியே வைத்துக்கொண்டு சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை காட்சிகளில் சேர்த்து மேலும் மெருகூட்டியது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.

சமீபத்தில் இப்படத்தை பார்த்த டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டரில் இப்படத்தைப் புகழ்ந்ததோடு எல்லோரும் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம்.  படத்தின் பாக்ஸ் ஆபிஸ் இன்னும் களை கட்ட ஆரம்பித்திருக்கிறதாம்.