தமிழில் காமெடி கலந்த பேய்ப்படங்கள் வெற்றி பெற ஆரம்பித்ததும் அடுத்து டஜன் கணக்கில் இதே ஜனரில் படங்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. அதில் புது இயக்குனர் சதீஷ் சந்திரசேகரின் இந்த ‘ஜின்’னும் அடக்கம்.

சதீஷ் படத்தைப் பற்றி திகிலும்போது ‘5 நண்பர்கள் வால்பாறைக்கு ஒரு ஜாலி ட்ரிப் செல்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு பேய் பிடித்து எல்லோரையும் எப்படி ஆட்டுகிறது என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறோம்’ என்றார்.

இந்தப் படத்திற்கு ஷூட்டிங் நடத்த பாழடைந்த பிரமாண்ட பங்களாவை தேடியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் நடித்த அன்பே வா, ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு போன்ற படங்கள் ஷூட் செய்யப்பட்ட பங்களா இப்போது பாழடைந்த நிலையில் இருந்திருக்கிறது.  அந்த பங்களாவில் தான் பெரும்பான்மை காட்சிகள் எடுக்கப்பட்டனவாம்.

படத்தைப் பற்றி இயக்குனர் மேலும் கூறுகையில்.. படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதுவெல்லாம் ஈஸியாக இருந்தது. ஆனால் நடந்தவைகளை நினைவுக்கு கொண்டு வந்த எழுதத்தான் சிரமமாயிருந்தது’ என்று மேலும் திகிலூட்டுகிறார்.  ஜின் படம் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்ததாம். அந்த ஐந்து நண்பர்களில் அவர் ஒருவராம் !!

‘ஒருவேளை அந்த பேய் பிடித்த நண்பர் நீங்கதானா ?!’ அவரிடம் நாம் கேட்க திரும்புவதற்குள் அங்கே யாரையுமே காணோம் !!

Related Images: