சண்டக்கோழி 2வில் விஷால் இல்லை?

விஷால் நடித்து சுந்தர் சி இயக்கிய ‘ஆம்பள’ படம் படு தோல்வியடைந்தது. அடுத்தாவது வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற வெறியோடு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாயும் புலி’ படத்தில் நடித்து வருகிறார் விஷால். வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு ஒன்றரை கோடி சம்பளம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாதிக்கும் மேல் முடிவடைந்துவிட்டது.

அடுத்ததாக லிங்குசாமியின் இயக்கத்தில் ‘சண்டக்கோழி’ படத்தின் 2ஆம் பாகத்தில் நடிக்கவிருந்தார் விஷால். ஆனால் நிதி சிக்கலால் லிங்குசாமி விழிபிதுங்கி நிற்பதால் அவரது தயாரிப்பில் நடிப்பது ரிஸ்க் என்று நினைக்கிறார் விஷால். எனவே பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கலாமென முடிவு செய்திருக்கிறாராம்.

சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கும் ‘ஹைக்கூ’ படத்தை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார் பாண்டிராஜ். அதோடு சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களும் முடிந்ததும் விஷால் படத்திற்கான வேலைகளில் இறங்கவிருக்கிறார் பாண்டிராஜ். விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கும் இப்படம் முழுக்க முழுக்க காமெடி சப்ஜெக்ட் என்று சொல்லக் கேள்வி.