அனிமேஷன் தொடரில் அமிதாப் பச்சன்

‘இந்தி நடிகர் அமிதாப் விரைவில் `அஸ்ட்ரா ஃபோர்ஸ்` என்னும் அனிமேஷன் தொடரில் நடிக்கவுள்ளார். இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக தயாரிக்கப்படும் இந்த அனிமேஷன் தொடரை கிராஃபிக் இந்தியாவும்,டிஸ்னி சேனலும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

குழந்தைகளை குறிவைத்து எடுக்கப்படும் இந்த `அஸ்ட்ரா ஃபோர்ஸ்` தொடர் ஜனவரி 2017 ல் தொடங்கி 52 வாரங்களுக்கு ஒளிபரப்பாகுமாம். ஏற்கனவே நம்ம ஊர் சுட்டி டி.வியில் ஜாக்கிசான் வந்து துவம்சம் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

நேற்று மும்பையில் நடந்த  இதன் தொடக்கவிழாவில் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்ட அமிதாப் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் உட்பட பலருடன் தேடித்தேடி செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

நம்ம கோடம்பாக்கத்துல யாராவது ஒரு நடிகராவது இவ்வளவு யதார்த்தமா இருக்கீங்களா பாஸ்?