‘அம்மணி’யில் பாட்டி தான் ஹீரோயின்

‘சொல்வதெல்லாம் புளுகு’ புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் அவரது ‘ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே’ படங்களுக்குப் பிறகு புதிதாய் இயக்கி வரும் படம் ‘அம்மணி’. டேக் என்டர்டெயின்மென்ட் சார்பில் வெண் கோவிந்தா தயாரிக்கிறார்.

நிஜமாய் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பார்வை (first look) சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆரோகணம் போல மீண்டும் ஒரு நல்ல படத்தைக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என்றார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் சுப்பு லட்சுமி பாட்டிக்கு வயது அதிகமில்லை ஜென்டில்மென் 82 தான். அதிக வயதுடைய ஒருவர் ஹீரோயினாக நடிப்பது இதுவே முதன் முறையாக இருக்கும்.

சுப்பு லட்சுமி பாட்டி ஏற்கனவே ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் நடித்தவர். படப்பிடிப்பில் அவரை யாராவது பாட்டி என்று அழைத்தால் பிடிக்காதாம். அக்கா என்றுதான் அழைக்கச் சொல்வாராம்.