ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சுகளை ஜூன் 26ம் தேதியிலிருந்து கடைகளில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. சிங்கப்பூர், மெக்ஸிகோ, சவுத்கொரியா, ஸ்விஸ், ஸ்பெயின் மற்றும் தாய்லாந்தில் ரீடெய்ல் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள ஸ்மார்ட் வாட்ச்சுகளை வாங்க, அதன் முந்தைய கருவிகளைப் போல முந்தின நாள் இரவே க்யூவில் வந்து நின்று வாங்கும் கூட்டம் இல்லை.

இத்தனைக்கும் ஐ.ஓஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சில் கூகுள் போல மேப்பிங், வித்தியாசமான அலர்ட்டிங் வசதிகள், வீட்டிலுள்ள எல்லா ஸ்மார்ட் கருவிகளையும் கண்ட்ரோல் செய்ய உதவும் ஹேண்ட்ஆப் டெக்னாலஜி, நமது இருதய துடிப்பு, எனர்ஜி செலவழிப்பு என்று உடலின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் ஆப்கள், ப்ளூடூத், பிற ஆப்பிள் கருவிகளுடன் வயர்லெஸ் இணைப்பு வசதி என்று விதவிதமான டெக்னாலஜி வசதிகள் இதில் உள்ளன. அத்தோடு மணியையும் காட்டும் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டோம்.

இந்த வாட்சின் தங்க மாடலின் விலை 15000 முதல் 45000 டாலர்கள் வரை. எல்லோருக்குமான ஸ்போர்ட்ஸ் மாடல்களின் விலை 600 டாலர்கள் முதல் 900 டாலர்கள் வரை விலை இருக்கிறது. ‘ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆப் மைண்ட்’ என்பது போல இவ்வளவு வசதிகளையும் எளிதில் புரிந்து கொண்டு உபயோகப்படுத்த முடியாதபடி மாதிரி அதன் ஆப்கள் குழப்பமாக இருக்கின்றன என்கிறார்கள் விமர்சகர்கள்.

டெக்னாலஜி கிறுக்கர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டியது. மற்றவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டியது..

Related Images: