பேஸ்புக்கில் டீன் ஏஜ் பசங்களை ஈசியாக ஏமாத்தலாம் – வீடியோ

உங்கள் 15 வயதுப் பெண் முன்பின் தெரியாத ஒரு பேஸ்புக் நண்பனை சந்திக்கவோ, அவனுடன் காரில் செல்லவோ ரெடியாவார் என்றோ அல்லது வீட்டிற்கு அழைக்கவோ மாட்டார் என்பதில் எந்த நிச்சயமும் இல்லை.

சமீபத்தில் கோபி பெர்சின் என்பவர் இதை நிரூபிக்க மூன்று டீன் ஏஜ் பெண்கள் உள்ள குடும்பங்களின் உதவியை நாடினார்.  அவர்களுக்குத் தெரியாமல் அவர்களது தாய் தந்தையரின் ஒப்புதலைப் பெற்ற அவர் பேஸ்புக்கில் ஜேஸன் பியஸ்ஸோ என்கிற 21 வயது அழகான வாலிபராக பேஸ்புக் அக்கௌன்ட் துவங்கினார்.  அதில் வேறு ஒரு அழகான வாலிபரின் புகைப்படத்தை அவரின் அனுமதி பெற்று பயன்படுத்திக் கொண்டார்.

பிறகு இந்த டீன் ஏஜ் பெண்களிடம் நண்பராக அழைப்பு கொடுத்து பேச ஆரம்பித்தார். இந்தத் தவறான பேஸ்புக் கணக்கை உண்மை என நம்பிய அந்தப் பெண்கள் எளிதில் அவரிடம் பழகினார்கள். மிகச் சாதாரணமாகப் பேசிய மூன்று முதல் ஐந்து நாட்களில் அந்தப் பெண்கள் அவரை சந்திக்கவோ அல்லது அவருடன் காரில் வெளியே செல்லவோ அல்லது அவரை தன் வீட்டிற்கு அழைக்கவோ அவர்கள் விருப்பம் தெரிவித்து வந்து சந்தித்தார்கள்.  இந்த நடவடிக்கைகள் அனைத்தையும், நிகழ்ந்த சந்திப்புகள் உட்பட அப்பெண்களின் பெற்றோர் உதவியுடன் அவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும் இது உண்மை. அந்த டீன் ஏஜ் பெண்களின் பெற்றோர் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக்கொண்டாலும் தங்கள் பெண் இந்த மாதிரி முன்பின் தெரியாத ஆளை நம்பி அவ்வளவு எளிதில் போய்விடமாட்டார் என்று கடைசிவரை உறுதியாக நம்பினார்கள். ஆனால் அவர்கள் ஏமாந்து போனார்கள்.

அந்த வீடியோவைக் யூட்யுப்பில் காணுங்கள்.

இந்த வீடியோவின் இரண்டாம் பாகத்தையும் பெரின் விரைவில் வெளியிடவிருக்கிறார். அதில் ஒரு போலியான இளம்பெண் போன்ற பேஸ்புக் கணக்கைத் தொடங்கி எவ்வளவு எளிதில் டீன் ஏஜ் ஆண்களை ஏமாற்றிவிட முடியும் என்று காட்டியிருக்கிறாராம்.