கிரெடிட், டெபிட் கார்டுகள் இல்லாமலே பணம் கொடுக்க எம்.விசா.

நம் பாக்கெட்டுகளில் இருக்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை செல்போன்கள் பிடிக்கப் போகின்றன. தற்போது வந்திருக்கும் புதிய பணப்பரிமாற்ற அமைப்பில் செல்போன்கள் மூலம் நாம் வாங்கும் பொருட்களுக்கு கடையில் பணம் செலுத்தி விடமுடியும்.

ஐ.சி.சி.ஐ வங்கியின் புதிய எம்விசா என்கிற முறையில் செல்போன்கள் மூலம் நாம் வாங்கும் பொருட்களுக்கு கடையில் பணம் செலுத்திவிட முடியும். இதற்கென பல பெங்களுரில் மட்டும் 1500 நிறுவனங்களை தனது நெட்வொர்க்கில் இணைத்துள்ளது ஐ.சி.ஐ.சி.ஐ.
இந்த முறையில் ஒவ்வொரு கஸ்டமருக்கும் ஒரு க்யூ.ஆர். குறியீடு (QR Code) கொடுக்கப்பட்டிருக்கும். அந்தக் க்யூ.ஆர் குறியீட்டை தனது செல்போனில் வைத்திருக்கும் நபர், அதை கடைக்காரரிடம் காட்டிய பின் கடைக்காரர் தன்னிடம் இருக்கும் கருவியில் அந்த குறியீடை ஸ்கேன் செய்து பின் பொருளுக்கான விலையை டைப் செய்வார். அதன் பின் வாடிக்கையாளர் தன்னை உறுதிப்படுத்த ஏ.டி.எம். பின் மற்றும் பாஸ்வேர்டுகளை தன்னுடைய மொபைலிலோ அல்லது கடைக்காரரின் கருவியிலோ டைப் செய்வார். உடனே தேவையான பணம் வாடிக்கையாளரி எம்.விசாவுடன் இணைத்திருக்கும் பேங்க் கணக்கிலிருந்து, கடைக்காரரின் அக்கௌன்ட்டுக்குப் போய்விடும்.

பணமில்லா, கருவியில்லா இந்த முறையை செல்போன்கள் மூலம் எல்லோரும் எளிதில் உபயோகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது உபயோகத்துக்கு வந்தால் பணப்பரிவர்த்தனையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் தேவை குறைய ஆரம்பித்துவிடும்.

செல்போன் மட்டும் போதும். கையில் பணமே எடுத்துச் செல்லத் தேவையில்லை.