4 ஆண்டுகளில் 11 இந்திய அணு விஞ்ஞானிகள் மர்ம மரணம் !!

இது சிபிஐ கண்டு பிடித்த விஷயமல்ல. ஹரியானாவைச் சேர்ந்த ராகுல் ஷெராவத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கேட்டிருந்த கேள்விகளுக்கு இந்திய அணுசக்தி துறை அளித்த பதில்களில் தான் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
2009 முதல் 2013 வரையிலான நான்கு ஆண்டுகளில் இந்திய அணுசக்தி துறையின் பல்வேறு ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றி வந்த 11 விஞ்ஞானிகள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதில் 8 விஞ்ஞானிகள் தூக்குப் போட்டு, நீரில் மூழ்கி அல்லது ஆய்வக விபத்தில் இறந்துள்ளனர்.
மும்பை பாபா அணுஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த 2 விஞ்ஞானிகள், 2010ல் அவர்கள் வீடுகளில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். 2012ல், ரவுட்பாதாவில் ஒரு விஞ்ஞானி வீட்டில் இறந்து கிடந்தார். பாபா அணுஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 ஆராய்ச்சி மாணவர்கள் இறந்து போயினர்.
மும்பையில் ஒரு விஞ்ஞானி கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டு கிடந்தார். ராஜா ராமண்ணா தொழில் நுட்ப மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி ஒருவர் தற்கொலைசெய்துகொண்டுள்ளார்.
2013 ல், கல்ப்பாக்கம் அணு உலையில் பணியாற்றி வந்த விஞ்ஞானி ஒருவர், கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பையில் ஒரு விஞ்ஞானி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவர்கள் எல்லோரும் தற்கொலை தான் செய்துகொண்டார்களா ? என்கிற கேள்விக்கு காவல்துறை அமைதி காக்கிறது. இந்தியாவில் இருக்கும் அணுசக்தி வியாபாரம் பல லட்சம் கோடிகள் மதிப்பு கொண்டது. அதை அடைய அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளிடையே மறைமுகப் போட்டி நிலவிவருகிறது. அதே போல அணுசக்தித் துறை மக்களுக்கு ஆபத்தான துறையாக இருப்பதை பல விஞ்ஞானிகள் வெளிக் கொண்டு வந்துள்ளனர். இதற்காகவும் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.
சமீபத்தில் ஜப்பானில் புகஷிமாவில் அணு உலையில் ஏற்பட்ட குளிர்விக்கும் தண்ணீர்த் தொட்டி லீக் ஆனதால் அணு உலையிலிருந்து கதிரியக்கம் பரவியது. அணு உலையை பாதுகாப்பாக நிறுத்தி விட்டதாக ஜப்பான் அரசும் அறிவித்தது. தற்போது புகுஷிமாவைச் சுற்றியுள்ள குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் 3 லட்சம் குழந்தைகள் வரை கான்சர் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.