ஒர் வெற்றி சாதாரண மனிதனை எத்தனை உயரத்துக்கொண்டுசெல்லும் என்பதற்கு காமெடி நடிகர் `பரோட்டா` சூரியின் 38 வது பிறந்தநாள் நிகழ்வுகளே சாட்சி.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் துவங்கி அகில இந்திய முக்குலத்தோர் பாசறையின் நிறுவனத் தலைவர் வி.ஜி.சிற்றரசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு நடிகர் விஷால் சிவகார்த்திகேயன் நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, விமல், விஷ்ணு, அருள்நிதி, சுப்பு, சாந்தனு, டைரக்டர்கள் விக்ரமன், மனோபாலா, சமுத்திரகனி, சுசீந்திரன், பாண்டிராஜ், பொன்ராம், எஸ்.ஆர்.பிரபாகரன், முத்தையா தயாரிப்பாளர்கள் வேந்தர் மூவிஸ் மதன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, ‘ரெட் ஜெயன்ட்’ செண்பகமூர்த்தி, திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், ஓன் புரொடக்சன்ஸ் ஆர்.ராம்குமார், பி.ஆர்.முருகன் உட்பட இண்டஸ்ட்ரியில் முக்கால்வாசிப்பேர் வாழ்த்துத்தெரிவிக்க, அஜீத் நேரிலழைத்து வாழ்த்தியதைத்தான் மறக்கமுடியாத வாழ்த்தாக நினைக்கிறார் சூரி.

குடும்பத்தோடு தன் வீட்டுக்கு வரச்சொன்ன அஜீத் சூரியின் அம்மாவிடம் பாசத்தோடு உரையாடி, அவரது குழந்தைகளை மடியில் வைத்துக்கொஞ்சி விளையாடியதை `தல போல இந்தப்பிறந்த நாள்ல என்னை யாரும் அசத்தல` என்கிறார்.

Related Images: