சினிமா செய்திகள், விமரிசனங்கள் வாசித்து இணையங்களில் பிரபலமாக இருப்பவர்களுக்கு போட்டியாக இயக்குநர் கவுதம் மேனனும் சானல் ஒன்று துவங்குகிறார்.  இதில் காஃபி வித் கவுதம் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களை அவர் நேர்காணல் செய்கிறார். ஏற்கனவே இருக்கிற சானல்களின் எண்ணிக்கை போதாதா, என்று கேட்பதற்கு முன்பாகவே சொல்லிவிடுகிறோம் கவுதம் மேனன் சானல் ஒளிபரப்பாகவிருப்பது ஒன்லி யு டுபில் மட்டுமே.

தனது முதல் எபிசோட் மங்களகரமாக இருக்கட்டும் என்று நினைத்தோ என்னவோ ஆந்திராவிலிருக்கும் அனுஷ்காவுக்கு போன் அடித்தாராம். அடுத்த பிளைட்டை பிடித்து வந்துவிட்டார் அவர். ச்சும்மா அதிருதில்ல… என்கிற மாதிரி ஒரு இன்டர்வியூ வருகிறது அனுஷ்காவுடன்.  இதில் மீடியாவுக்கு சொல்லாத, தனது காதல் சமாச்சாரங்கள் உள்ளிட்ட  பல விஷயங்களை கவுதமுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறாராம் அனுஷ்கா. அதற்கப்புறம்?

ஏற்கனவே தனுஷின் குட் புக்கில் இடம் பிடித்துவிட்டாரல்லவா ? அவரும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து இந்த காபி வித் கவுதம் பேட்டியில் கலக்கி விட்டாராம். பேச்சோடு பேச்சாக தனுஷுக்கு கவுதம் ஒரு கதையும் சொல்லி உடனே ஓ.கே யும் வாங்கிவிட்டாராம்.

ஒரு காஃபி கொடுத்து கவுதம் தனுஷின் கால்ஷீட் வாங்கிய கதை இதுதான்.

Related Images: