டைரக்டர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படம் உலகப் புகழ் பெற்ற ‘ரெமி’ விருதைவென்றுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஏப்ரல் 8 முதல் 17 ஆம் தேதி வரைநடைபெறும் 49 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் (‘வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன்’)

இந்த விருது வழங்கப்பட உள்ளது. ‘வேர்ல்ட் ஃபெஸ்ட்’ உலகின் முதன்மையான திரைப்படவிழாக்களில் ஒன்றாகும். உலகின் புகழ்பெற்ற இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

(ஜுராஸிக் பார்க், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்), ரிட்லி ஸ்காட் (கிளேடியேட்டர், த மார்ஷியன்),ஜார்ஜ் லுகாஸ் (ஸ்டார் வார்ஸ்), ஆங் லீ (ஹல்க், லைப் ஆப் பை), பிரான்சிஸ் போர்ட் கப்போலா(தி காட்பாதர்),

ஜான் லீ ஹான்கோக் (த பிளைண்ட் சைட், சேவிங் மிஸ்டர். பேங்க்ஸ்) போன்ற பலதலைசிறந்த இயக்குனர்கள் இந்தத் திரைப்பட விழாவின் கண்டுபிடிப்பே. நாற்பத்தி மூன்றுக்கும்மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்கள் ‘வேர்ல்ட் ஃபெஸ்ட்’திரைப்பட விழாவில் ரெமி விருதை வெல்ல போட்டி போடும். அவைகளில் மிக மிகதரமானவையே தேர்வு செய்யப்படும்.

‘கனவு வாரியம்’ திரைப்படம் உலகில் முதல் முறையாக வேர்ல்ட் ஃபெஸ்ட் திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. அருண் சிதம்பரத்தின் கதை, திரைக்கதை, வசனம்,பாடல்கள், இயக்கத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக அருண் சிதம்பரம்அறிமுகமாகிறார்.

இது மட்டுமின்றி, ‘கனவு வாரியம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கல்லா மண்ணா’என்ற பாடலும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஒக்லஹோமாமாகாணத்தில் ஏப்ரல் 19 முதல் 24 வரை நடைபெறும் ‘பேர் போன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில்’ திரையிட ‘கல்லா மண்ணா’ பாடல் தேர்வாகியுள்ளது. ‘கல்லா மண்ணா’ பாடல் நகர

மயமாக்கலிலும் வீடியோ கேம் மோகத்திலும் நாம் மறந்து போன 51கிராமிய விளையாட்டுக்களை, பாடல் வரிகளின் மூலமாகவும், காட்சியமைப்பின்மூலமாகவும் படம்பிடித்து காட்டியுள்ளது.

Related Images: