ஹாலிவுட் படங்களில் நடிப்பது என்பது தற்போது தமிழ்நாடு வரை சகஜமாகிவிட்டது. அந்த வரிசையில் தற்போது நாசர் ஹாலிவுட் படமொன்றில் போலீசாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பங்கஜ் சேகல் என்ற அல்ஜீரியா இயக்குனர் இயக்கும் ‘சோலார் எக்ளிப்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தில் நாசர் நடிக்கவுள்ளார்.

நாசர் இதற்கு முன்பு ‘பேர் ஹேம்’ என்கிற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இது தவிர, ‘நத்திங் பட் லைப்’, ‘மார்னிங் ராகா’ என்கிற ஆங்கிலப் படங்களிலும் நாசர் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘இறுதிச்சுற்று’ படத்திலும்  நாசர் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல்,  ரஜினியுடன்  ‘கபாலி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வட இந்திய நடிகர் ஓம்பூரி ஏற்கனவே இதுபோல ஏற்கனவே பல ஹாலிவுட் படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வந்துவிட்டார். நாசர் அது போல உலக அளவில் கவனம் பெறுவாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Images: