அஜித்,விஜய்,ஆர்யா,விஷால்…தயாரிப்பாளர் ஆகிறார் அதர்வா

கிக்காஸ்’ என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கினார் நடிகர் அதர்வா. ‘கணிதன்’ ரிலீஸுக்குப் பின்னர் ‘ருக்குமணி வண்டி வருது’படத்தில் நடித்துவரும் அதர்வாவின் இம்முடிவை சக நடிகர்கள் பலரும் வரவேற்று ட்வீட் செய்துள்ளனர்.

ஏப்ரல் 1ம் தேதியன்று இந்நிறுவனத்தின் முதல்பட விபரங்களை வெளியிடவிருக்கும் அதர்வா,இதற்காக தனது வீட்டுக்கு அருகே வளசரவாக்கம் பகுதியில் அலுவலகம் தேடி வருகிறார்.இந்நிறுவனத்தில், தன் தந்தை முரளியைப்போலவே புதுமுக இயக்குநர்களுக்கே முன்னுரிமை தருவதாக இருக்கிறாராம்.

’சொந்த நிறுவனம் என்பதால் நீங்க ஹீரோவா நடிக்கிற படங்களை மட்டுமே தயாரிப்பீங்களா பாஸ்? என்றால், ‘ நோ சான்ஸ்…அஜித்,விஜய் தொடங்கி ஆர்யா,விஷால் வரைக்கும் ஒருத்தரையும் விட்டுவைக்காம எல்லார்கிட்டயும் கால்ஷீட் கேக்கப்போறேன் பாஸ்’ என்கிறார்.

தம்பி பொழைச்சுக்குவாரு…

Female fist isolated on a white background.

Female fist isolated on a white background.