பாகிஸ்தானில் இந்திய உளவு அதிகாரி கைது !?

கடந்த 2015ல் பாகிஸ்தான் கராச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 45 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். உலக நாடுகள் அனைத்தும் இந்த தாக்குதலை கண்டித்தது. அதில் இந்தியாவின் கண்டன அறிக்கை மட்டும் சற்றே வித்தியாசமாக இருந்தது. அதாவது பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை ஊக்குவிப்பதால் தான் இப்படிப்பட்ட தாக்குதல்கள் உள்நாட்டிலேயே நடக்கிறது எனவே இனி மேலாவது பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை உடனடியாக கைவிடவேண்டுமென்று சொல்லிற்று.

இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு ஒருவாரம் கழித்து பதிலளித்த பாகிஸ்தான் இராணுவ தளபதி பாகிஸ்தானில் நடக்கும் அனைத்து உள்நாட்டு குழப்பங்களுக்கும் இந்தியாவே காரணம். அதன் உளவு அமைப்பான ‘ரா’ வே ( RAW – Research and Analysis Wing ) பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதம் கொடுத்து பாகிஸ்தானில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னதோடு ஐ.நாவில் பாகிஸ்தானுக்கான நிரந்திர உறுப்பினராக இருக்கிற மலிகா லோதி (Maleeha Lodhi) மூலம் இந்திய உளவு அதிகாரிகள் பாகிஸ்தானில் செய்த சதி வேலைகளை ஆதாரங்களுடன் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் கொடுத்தார். இது குறித்து இதுவரை இந்தியா மறுப்பேதும் சொல்ல வில்லை என்பது இங்கு கவனிக்க வேண்டியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிறன்று காராச்சியில் வைத்து இந்திய உளவு அமைப்பான ’ரா’வை சேர்ந்த குல்பூசன் யாதவ் (Kulbhushan Yadav ) என்ற நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஹீசைன் முபாரக் பட்டேல் (Hussain Mubarak Patel) என்ற போலி பாஸ்போர்ட் மூலம் பாகிஸ்தான் வந்திருக்கிறார். இவரை கைது செய்து விசாரித்திருக்கிற பாகிஸ்தான் அரசு. இவர் தான் காராச்சி துப்பாக்கிசூட்டிற்கு தீவிரவாதிகளுக்கு உதவியவரென்றும் மேலும் பல உண்மைகளை வாக்குமுலமாக தங்களிடத்திலே சொல்லியிருக்கிறாரென்றும். தாங்கள் ஆரம்பம் முதலே சொல்லி வருவது போல பாகிஸ்தானில் நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் இந்திய அரசும் அதன் உளவு அமைப்பும் தான் காரணம் என்பதற்கு இப்போது மேலும் நபர் ஆதாரமாகியிருக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. இந்த கைது குறித்தோ அல்லது பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு குறித்தோ இந்தியா இதுவரை பேசாமல் இருப்பது மிகுந்த சந்தேகத்தை கிளப்புகிறது.

இதேபோல இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளில் பாகிஸ்தானின் உளவு அமைப்பு சம்பந்தப்பட்டிருக்கிறது என்று இந்தியா தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறது. எது எப்படியோ அரசுகளின் வெறியால் அப்பாவி மக்கள் பலியாவதும் சாதாரண விளையாட்டான கிரிக்கெட் போட்டிகளைக் கூட இரண்டு நாடுகளுக்கும் எதிராக நடக்கும் போராக மாற்றி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இதை சாக்காக வைத்து இங்குள்ள அப்பாவி முஸ்லிம் மக்களை முஸ்லீம் அல்லாத மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் வேலை நடக்கிறது.

எனவே அரசுகளின் இதுபோன்ற சூழ்ச்சிகளில் சிக்கி பலியாகமால் மனிதத்தோடு வாழ்வோம்..

முகநூலில் கொண்டல் சாமி

என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா !!?