நெடுநாள் கே ள்விக்கு வி டைகண்ட கே.வி. ஆனந்த்

மாற்றான்’ படுபரிதாபமாக தோற்றான் என்று ஆகி ‘அநேகன்’ கவிஞர் சிநேகனை விட சொதப்பலாக ஆகி அடுத்த படம் கிடைக்காமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்த கே.வி. ஆனந்துக்கு விஜய் சேதுபதி அடைக்கலம் கொடுக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் நவில்கின்றன.

‘அநேகன்’ தோல்விக்குப் பிறகு சூப்பர் ஸ்டார்  ரஜினி தொடங்கி சுமார் ஸ்டார்கள் ஆர்யா,ஜீவா வரை ‘ஹலோ பாஸ் அடுத்த படம் பண்ணலாமா? என்று கே.வி. ஆனந்த் போன் போடாத ஹீரோக்களே இல்லை. ஆனால் எதிர்முனைகள் பெரும்பாலும் தொடர்பு எல்லைக்கு அப்பாலும் சில போன்கள் வயர் அறுந்து தொங்கிக்கொண்டிருந்த நிலையிலும் அவரது பொழப்பு புண்ணாகிக் கிடந்தது. ஆனால் என்னவோ ஒரு காரணதுக்காக ‘நீ சப்பையா ஒரு ஹீரோவைக் கூப்பிட்டு வந்தாலும் நாங்க புரடியூஸ் பண்றோம்யா’ என்று பல வண்ணக் கர்சீஃப்களுடன் கே.வி.யின் கண்ணீர் துடைக்கக் காத்திருந்தது ஏ.ஜி.எஸ். நிறுவனம்.

இந்நிலையில் கே.வி.யின் கரத்தை வலுப்படுத்த தானே வாண்டட் ஆக வண்டியேற விஜய் சேதுபதி தயாராகிவிட்டதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த சில மணி நேரங்களில் வரக்கூடும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கொக்கரிக்கின்றன.