இசைஞானியை வரையும்போது என்ன வண்ணமோ மனசுல…

எல்லாமே காலம் கடந்துதான் நடக்கிறது எனினும் இப்போதாவது நடக்கிறதே என்று ஆறுதல் அடைந்துகொள்ளும் அளவுக்கு ராஜாவை கவுரவிக்கும் வேலைகள் தொடர்ந்து நடைபெற ஆரம்பித்திருக்கின்றன.

உலகிலேயே முதன் முறையாக 1000 படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 100 ஓவியர்கள் இணைந்து வரையும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் , நாசர் , பொன்வண்ணன் , இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவை நடிகர் விஜய் சேதுபதி வர்ணத்தை எடுத்து கொடுத்து சிறப்பித்து வைத்தார்.

​லயோலா கல்லூரியில் வைத்து இவ்விழா நடைபெற்றது .விழாவின் தனி சிறப்பு யாதெனில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசைக்கு ஏற்றவாறு ஓவியர்கள் அனைவரும் ஓவியம் வரைந்தது தான். இயக்குநர் பா.ரஞ்சித் அவருடைய மனைவி மற்றும் மகள் ஆகியோர் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தது தனி சிறப்பு. இவ்விழா நாளையும் தொடரும். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக இந்த ஓவியங்கள் அனைத்தும் விரைவில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக இந்த 1௦௦ ஓவியங்கள் அனைத்தும் புத்தகங்களாக வெளியிடப்படவுள்ளது.

ம்ம்ம்ம்…கிளப்புங்க….தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்.