Indian Bollywood actors Ritika Singh (R) and R. Madhavan pose during the promotion of upcoming Hindi film 'Saala Khadoos' directed by Sudha Kongara in Mumbai on January 11, 2016. AFP PHOTO / AFP / STR (Photo credit should read STR/AFP/Getty Images)

வழக்கமாக தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட ஒரு சில தினங்களில் சர்ச்சைகள் வெடித்துக்கிளம்பும். சில டப்பா படங்களுக்கும் நபர்களுக்கும் தொடர்ந்து தேசிய விருதுகள் போய்ச்சேர்வதே அதற்குக் காரணம். ஆனால் இந்த யாரும் எவ்வித சர்ச்சைகளும் எழுப்பாத நிலையில் ‘இறுதிச்சுற்று’ படத்துக்காக சிறந்த சப்போர்டிங் நடிகை விருது பெற்ற ரித்திகா சிங் லேசாக அதிர்ச்சி அடைந்து, ஒரு பெரும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து ரித்திகா சிங் ட்விட்டர் தளத்தில் கூறியதாவது:

“கடவுளே! என் வாழ்க்கையில் இந்தளவுக்கு அழுததில்லை. என் வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம்.

தேசிய விருது?

இதற்கு நான் தகுதியுடையவள் என்று நான் எண்ணியதே இல்லை. அந்தப் படத்துக்காக நான் சொந்தக் குரலில் பேசவே இல்லை. எனக்காக உமா மகேஸ்வரி டப்பிங் பேசினார். இந்த விருதுக்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

இறுதிச்சுற்று படத்தில் மதி கதாபாத்திரத்தில் நடிக்கக் காரணமாக இருந்த இயக்குநர் சுதா உள்பட அனைவருக்கும் நன்றி. இந்த மண்ணில் நான் தான் மிகவும் அதிர்ஷ்டமானவள். எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

பொதுவாக டப்பிங் பேசாதவர்களுக்கு விருதுகள் தருவதில்லை. ரித்திகாவின் பஞ்ச்சில், அதாவது குத்துச்சண்டை பஞ்ச்சில் ஜூரிகள் சொக்கி விழுந்திருக்கக்கூடும்.

Related Images: