செல்வா பேக் டு யுவன்.

பல படங்களில் புக் ஆகினாலும் ஒரே சமயத்தில் ஐந்தாறு படங்களில் பணிபுரிய இன்றைய இளம் இசையமைப்பாளர்களால் முடிவதில்லை. அக்காலத்தில் எம்.எஸ்.வி, இளையராஜா என்று துவங்கி தற்போது ரஹ்மான் வரை ஜாம்பவான்களிடமிருந்த திறமையும், உழைப்பும் இக்கால இளைஞர்களிடம் இல்லை தான்.

ரஜினியின் கபாலி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஆரம்பித்ததுமே அவரைத் தேடி பல வாய்ப்புகள் சென்றன. ஆனால், அனைத்தையும் ஒத்துக் கொள்ளாமல் ஒன்றிரண்டு படங்களை மட்டுமே அவர் தேர்வு செய்தார்.  அதில் ஒரு படம்தான் செல்வராகவன் இயக்கி வரும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

படப்பிடிப்பை முக்கால்வாசி முடித்துவிட்ட செல்வராகவன் சந்தோஷ்நாராயணனின் பாடல்களைக் கேட்டும் தரவில்லை சந்தோஷ். கபாலி, இறைவி ஆகிய படங்களுக்கு மட்டுமே சந்தோஷ் நாராயணன் முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். மற்ற படங்களைக் கண்டுகொள்வதில்லையாம். பொறுத்துப் பார்த்த செல்வராகவன்  தற்போது சந்தோஷ் நாராயணனை விட்டுவிட்டு யுவன்ஷங்கர் ராஜாவிடம் போய் ஒப்பந்தம் போட்டுவிட்டாராம்.