போதைப்பொருள் வழக்கில் சிக்கும் ப்ரியங்காவின் சகோதரர்.

நடிகை ப்ரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார்.   இந்திய அரசின் சமாதான தூதர் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கும் ப்ரியங்காவுக்கு சித்தார்த் சோப்ரா என்ற சகோதரர் உள்ளார்.

இவர் புனேயில் தனியார் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு போதைபொருள் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து சமீபத்தில் இந்த விடுதியில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது அந்த விடுதியில் போதை பொருள் விற்பனை செய்யப்பட்டது  கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த விடுதியின் உரிமையாளரான சித்தார்த் மற்றும் விடுதி மேலாளர் ஆகியோர் மீது போதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் ரெய்டு நடத்திய சமயம் சித்தார்த் இந்தியாவில் இல்லை, அவர் ப்ரியங்காவுடன் நியூயார்க்கில் இருப்பது தெரியவந்தது. சித்தார்த் இந்தியா வந்தவுடன் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மல்லையா மாதிரி எஸ்கேப் ஆகுங்க சித்தார்த் !