2006-ல் வசந்தபாலனின், ‘ஆல்பம்’ என்ற அல்பமான படத்தில் அறிமுகமாகி, அத்தோடு தமிழ்சினிமாவை விட்டு தலைமறைவாகியிருந்த ஆர்யன் ராஜேஷ், நடுவில் சேரனின் ‘பொக்கிஷத்தில்’ மட்டும் ஒரு குட்டி கேரக்டரில் எட்டிப்பார்த்துவிட்டுப்போனார்.
ஏறத்தாழ இதே காலகட்டத்தில் ‘பேசாத கண்ணும் பேசுமே’ பார்வை ஒன்றே போதுமே’ போன்ற சுமார் ஹிட் படங்களைக்கொடுத்துவிட்டு, யார் பார்வையிலும் படாமல் போனவர் இயக்குனர் முரளிகிருஷ்ணா.
இப்போது இந்த இருவரும் எங்கேயோ சந்தித்து,’துட்டு’ என்ற பெயரில்,மும்பையைச்சேர்ந்த லட்டு ஃபிகருடன், முக்கால்வாசி படத்தை முடித்திருக்கிறார்கள்.
‘’கதை கந்துவட்டியின் கொடுமை சம்பந்தப்பட்டது என்றவுடன் சீரியஸான படம் என்று நினைப்பார்கள். ஆனால் அதை நான் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்துசொல்லியிருக்கிறேன். இடையில் சிலகாலம் காணாமல் போயிருந்த எனக்கும் ஆர்யன் ராஜேஷுக்கும் மறுவாழ்வு தரப்போகும் படம் இது. படத்தில் நான் அறிமுகப்படுத்தியிருக்கும் மும்பை நடிகை சோனா சோப்ரா,வருஷம் 16’ படத்தில் பார்த்த குஷ்பு மாதிரியே ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார்.இவர் தான் தமிழ்சினிமாவின் அடுத்த குஷ்பு என்று நான் குஷ்பூ தலையிலேயே கூட அடித்து சத்தியம் பண்ணத்தயார்’’ என்கிற முரளிகிருஷ்ணா, முதல்முறையாக ‘துட்டு’ படத்தின் இசையமைப்பாளர் அவதாரத்தையும் எடுத்திருக்கிறார்.
’துட்டு’ மெட்டு ஹிட்டு ஆகுமா? லட்டு சோப்ரா குஷ்பூ ஆகுமா??