தாண்டவம்

தமிழ்த்திரையுலக வரலாற்றிலேயே லண்டனில், தொடர்ந்து 60 நாட்கள், அதுவும் கடும் குளிரிலும், மழையிலும், படப்பிடிப்பு நடத்திமுடித்த படம், என்ற பெருமையுடன் சென்னை திரும்பியிருக்கிறது ‘தாண்டவம்’ டீம்.

படப்பிடிப்பு நடந்ததென்னவோ கடுமையான குளிர்ப்பிரதேசத்தில் என்றாலும், அங்கிருந்து தொடர்ந்து சூடான கிசுகிசுக்கள் வந்தவண்ணமே இருந்தன. அதுவும் மூன்றாவது நாயகியாக நம்ம லட்சுமி ராய் போய் ஜாயின் பண்ணியவுடன் செய்திகள் தீப்பற்றி எரிந்தன.

இந்த 60 நாட்கள் படப்பிடிப்பு நடந்த காலகட்டத்தில், அமலாபால் விஜயை சந்திக்க லண்டன் சென்றது, படத்தின் இரண்டாவது நாயகி எமி ஜாக்‌ஷனுக்கு மேக்கப் வுமன் செட் ஆகவில்லை என்றவுடன், விக்ரம் தன் சொந்த முயற்சியில் மும்பையிலிருந்து ஒரு மேக் அப் வுமனை வரவைத்து, அவரை தானே மெயிண்டெயின் பண்ணியது, லட்சுமி ராய் விக்ரம் ரூமுக்கு பக்கத்து ரூம் கேட்டு அடம்பிடித்து, அந்த ரூம் கிடைக்கும் வரை, ஷூட்டிங்கை பகிஷ்கரித்தது, பின்னர் லண்டனில் விக்ரமுடனான அனுபவம் சூப்பராக இருந்தது என்று ப்ரஸ்மீட்டில் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டது என்று எக்கச்சக்கமாக அடுக்கலாம்.

மேற்படி செய்திகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, இன்னொரு சூடான செய்தியை வெளியே விடாமல் ‘தாண்டவம்’ யூனிட் மறைத்துவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கதைப்படி, ஸாரி .. ஒரிஜினல் டி.வி.டி.யின் படி ஒரு சண்டைக்காட்சியில் விக்ரம் முக்கால் நிர்வாணமாக,அதாவது வெறுமனே ஜட்டி மட்டும் அணிந்து நடிக்கவேண்டி வந்ததாம். கடும் குளிர், அதுவுமில்லாமல் இதுவரை விக்ரம் சட்டையைக் கழற்றி மட்டும் கூட நடித்ததில்லை. அதனால் கேக்கலாமா வேண்டாமா என்று தயங்கிக்கொண்டிருக்க, விஜயின் தயக்கத்தை புரிந்துகொண்ட விக்ரம்,’’ என்ன பாஸ் ஒரிஜினல் பட டிவிடியில இருந்த எல்லா சீனையும் சுட்டு படத்துல வச்சிட்டோம். இத மட்டும் விட்டா எப்படி. நான் நடிக்கிறேன் பாஸ்’’ என்றபடி முக்கால் நிர்வாணமாக கேமரா முன்னால் வந்து நின்று யூனிட் ஆட்கள் அத்தனை பேரையும் மூக்கில் விரல் வைக்க வைத்தாராம்.

தாண்டவம்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.