நள்ளிரவிலும் கூலிங் கிளாஸ் கண்ணாடி போட்டுக்கொண்டு அலைவதாலேயே, மற்றவர்களை விட சற்று கூடுதலாக பிரபலம் அடைந்த இயக்குனர் மிஷ்கின் இப்போது, ஜீவாவை ஹீரோவாக வைத்து ‘முகமூடி’ என்ற
காமிக்ஸ் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
யூ.டி.வி மோஷன் பிக்ஷர்ஸ் தயாரித்துவரும் இந்தப்படம் துவங்கி ஒரு வருடம் ஆகியும் இன்னும் முடிகிற பாடாய் தெரியவில்லை. காரணம் இதுவரை உலக சினிமா காணாத அளவில் சண்டைக்காட்சிகள் அமைக்கிறேன் பேர்வழி என்று, சீனாவில் ப்ரூஸ் லீ, ஜாக்கிசான்களுக்கு எல்லாம் சண்டை கற்றுக்கொடுத்தவர்கள் சூ என் லாய், வா எங்க புரடியூசர் காசை நீ கொஞ்சம் எஞ்சாய் சிலரை அழைத்து வந்தார்.
இதனால் கடுப்பாகிப்போன படத்தின் ஒரிஜினல் ஃபைட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், ‘’நம்ம கிட்ட இல்லாத திறமையா வெளிநாட்டுக்காரன் கிட்ட இருக்கு. இது எங்களை கேவலப்படுத்துற மாதிரி இருக்கு. உங்க படத்துக்கு ஏற்கனவே நீங்க கேட்ட நாட்களை விட மூனு மடங்கு அதிகமாவே வேலை செஞ்சாச்சி. இப்பிடியே ஒரு ஃபைட்ட 45 நாள் 50 நாள்னு எடுத்தா நாங்க வேற படத்துல வேலை பாக்குறதா வேண்டாமா’’? என்று மிஷ்கினை நாக்கை புடுங்குகிற மாதிரி நாலு கேள்விகளை கேட்டுவிட்டு படத்தை விட்டே வெளிநடப்பு செய்துவிட்டார்.
இதை சற்றும் எதிர்பாராத மிஷ்கின் படத்தின் மீதிச்சண்டைகளை முடிப்பதற்கு ஆக்ஷன் ப்ரகாஷ் மாஸ்டரை புக் பண்ணியுள்ளார்.
அட்லீஸ்ட் இவர் கூடவாவது சண்டை போடாம படத்தை முடிங்க பாஸ்.