வருடம் 1984. அநேகமாக அது பாலுமகேந்திராவின் ‘நீங்கள் கேட்டவை’ யாக இருக்கக்கூடும், அல்லது பிரபுவுடன் ஜோடி சேர்ந்த ‘உங்க வீட்டுப்பிள்ளை’. அத்தோடு திரையுலகை விட்டு வெளியேறிப்போன பூர்ணிமா பாக்யராஜ், சுமார் 28 ஆண்டுகால இடைவெளிக்குப்
பின் மீண்டும் நடிக்க ஆரம்பிக்க இருக்கிறார்.
படத்தின் பெயர் ‘ஆதலினால் காதல் செய்வீர்’. இயக்குனர் , பூர்ணிமாவை மீண்டும் நடிக்கவைக்க கபடி ஆடிய அழகர்சாமி சுசீந்திரன்.
1979-ம் ஆண்டு மலையாளத்தில் ஃபாசில் இயக்கிய ‘மஞ்சில் விரிஞ்ஞ பூக்கள்’ படத்திலும் , தமிழில் அடுத்த ஆண்டே, ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்திலும் அறிமுகமாகி, தனது வீரியமான நடிப்பால், சுமார் ஐந்தே ஆண்டுகளில் 70 படங்கள் வரை நடித்தவர் பூர்ணிமா. ‘விதி’ இவரை யாரும் மறக்க முடியாத படம்.
பாக்கியராஜின் டார்லிங் டார்லிங் ஆனபிறகு நடிப்பை சுத்தமாக நிறுத்திக்கொண்ட பூர்ணிமா, நடுவில் மணிரத்னம் உட்பட பல முக்கிய இயக்குனர்கள் அழைத்தும் ஏனோ சம்மதிக்கவில்லை.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனது நல்லு கிரியேஷன்ஸ் சார்பாக சுசீந்திரனே தயாரிக்கும் இந்தப்படத்துக்கும், ஆரம்பத்தில் வழக்கம்போலவே ‘நோ’ சொல்லிவிட்டாராம் பூர்ணிமா.
‘’அட்லீஸ்ட் கதையை மட்டும் கேட்டுட்டு, பிறகு நோ’ சொல்லுங்க மேடம்’’ என்று சுசீந்திரன் தொடர்ந்து தொல்லை கொடுக்க,அதை கணவர் பாக்யராஜ் வழிமொழிய, ஒருவழியாக கதைகேட்டு, மறுபேச்சு பேசாமல் நடிக்க ஒப்புக்கொண்டாராம் அம்மா பூர்ணிம்மா.