தாண்டவம்

‘படித்தவன் பாவம் செய்தால் அய்யோவென்று போவான். நடித்தவன் பாவம் செய்தால்?

நடிகர் விக்ரமை நோக்கி, தமிழ்சினிமாவின் உதவி இயக்குனர்கள் வட்டாரம் கேட்கத் துடித்துக் கொண்டிருக்கும் கேள்வி இதுதான்.

இப்போதெல்லாம் நடிகர்களும், இயக்குனர்களும் கதை என்ற பெயரில் திருட்டு டி.வி.டி.யை, அவர்களுக்கு புரிந்த அளவில் காப்பி அடித்து, படங்களில் ஓ.பி. அடிப்பது பேசிப்புளித்துப்போன கதைதான்.

ஆனால் கடந்த மாதம் படப்பிடிப்பு நடந்து முடிந்த ‘தாண்டவம்’ படத்தைப் பற்றி சமீபத்தில் வெளிவந்த செய்தி கேடபவர்களை கண்டிப்பாக வயிற்றெரிச்சல் படவைக்கும். காரணம் இந்தக் கதை திருடப்பட்டிருப்பது, கால்வயிற்றுக் கஞ்சிக்கும் அல்லல் பட்டு இயக்குனர் வாய்ப்பு தேடி அலையும் ஒரு உதவி இயக்குனரிடமிருந்து. அதுவுமின்றி அவர் ஒரு ஊனமுற்றவரும் கூட என்பது வேதனையை அதிகரிக்க வைக்கும், வெறி ஏற்படுத்தும் செய்தி.

கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி, இந்த வில்லன் வேலையைச்செய்தவர் கதாநாயகன் விக்ரம்.

தாண்டவம்’ படக்கதையின் உரிமையாளர் பெயர் பொன்னுச்சாமி. இயக்குனர் ராதாமோகனிடம் உதவியாளராகப் பணிபுரிந்த பொன்னுச்சாமி’ தாண்டவம்’ படம் தொடங்க சில மாதங்கள் இருக்கும்போது, தற்போது இப்படத்தை தயாரித்து வரும் யூ.டி.வி.யின் தனஞ்செயன் மூலமாக நடிகர்’ விக்ரமுக்கு மேற்படி கதையை சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே இதே கூட்டணி திருட்டு டிவிடி.யில் சுட்டு நாறிய ‘தெய்வத்திருமகன்’ போல் பழையபடி ஒரு டி.விடியை சுடவேண்டாமே என்று யோசித்துக்கொண்டிருந்தவேளையில், சரியாக பொன்னுச்சாமியின் கதை விக்ரமிடம் வரவே,’ ஒரு உதவி இயக்குனர் தானே, அவரால் என்ன செய்துவிடமுடியும் ? என்ற ஆணவப்போக்கில் சுட்டு எடுக்கப்பட்டிருப்பதுதான்’ தாண்டவம்’ என்பதற்கு ஆதாரமான செய்திகள் இப்போது நடமாட ஆரம்பித்துவிட்டன.

இந்த தகவலை மிகத்தாமதமாகவே தெரிந்துகொண்ட பொன்னுச்சாமி, சில உதவி இயக்குனர்களின் உதவியுடன், விக்ரம், இயக்குனர் விஜய், யூ.டி.வி. தனஞ்செயன் ஆகியோருக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தியிருக்கும் நிலையில், அவரது காலில் விழுந்து சரிக்கட்டும் வேலையை மேற்படி மூவருமே செய்து வருகிறார்களாம்.

வெளிநாட்டு டிவிடி. திருட்டுக்களைக்கூட ஒரு வழியில், அதாவது மூளை இல்லாதவர்கள் இருப்பவர்களிடமிருந்து திருடுகிறார்கள் என்ற அடிப்படையில், மன்னித்துவிடலாம். ஆனால் சினிமாவின் பரிதாப ஜீவன்களான உதவி இயக்குனர்களிடமிருந்து கதையைத்திருடி படம் எடுப்பதென்பது, பிச்சை எடுப்பதையும் விட கேவலமான செயல். அப்படிப்பட்ட படங்கள் இதுவரை ஓடியதில்லை எனும்போது தண்டவனான ‘தாண்டவம்’ மட்டும் ஓடிவிடுமா என்ன?’.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.