ஒரு வாரகாலமாக, யார் பார்வையிலும் படாமல், செல்போனையும் சுவிட்ச் ஆஃப் பண்ணிவிட்டு தலைமறைவாக இருந்த முத்த அமைப்பாளர் அனிருத் துணிந்து வெளியே வந்தார்.
முதலில் அனிருத் தரப்பு, இணையதளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என்று மறுப்பு வெளிடிடுவதாகத்தான் திட்டம் தீட்டி இருந்தனராம். அதற்குள் ஆண்ட்ரியா உண்மைகளை ஓப்பனாக ஒத்துக்கொள்ளவே, அனிருத்தும் வேறுவழியின்றி, ’முத்தம் நடந்தது என்ன?’ என்று நேற்று ஒரு ஆங்கில தினசரி இதழில் பேட்டி அளித்துவிட்டார்.
‘’ 21 வயதே ஆன சின்னப்பையன் நான். அந்த நடிகையை காதலித்து, பின்னர் அதைக் கடந்தும் வந்துவிட்டேன். கடந்தவைகளை மறந்து, நான் என் இசையிலேயே முழுக்கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் வேளையில், இப்படிப்பட்ட படங்களை வெளியிட்டு, பொதுமக்கள் மத்தியில் என் இமேஜை உடைக்க நினைப்பவர்கள் மனம் எவ்வளவு குரூரமானது?’
என் குடும்பம் மிகவும் ஆச்சாரமானது. ஆனால் இந்த விசயத்தை நான் பயந்த அளவு பெரிது படுத்தாமல் என்பக்கம் நின்றது எனக்கு மிகப்பெரிய ஆறுதலான சமாச்சாரம்.
எனக்குத்தெரிந்த ஒருவரின் லேப்-டாப்பில் என் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றும்போது, எனது போனிலிருந்த வீடியோவை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.
‘ இந்த பெரிய துரோகத்தை செய்தவர் யார் என்பதைக்கூட என்னால் கண்டறிந்து வெளியே சொல்லமுடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை.
இனிமேலாவது தயவு செய்து என்னை ஒரு இசையமைப்பாளராக மட்டும் பாருங்கள். என் பெர்சனல் வாழ்க்கையை நோண்டாதீர்கள்’’ என்று மெலடியாக முடிக்கிறார் அனிருத்.
பாட்டை ரெகார்ட் பண்ணலாம். இதுமாதிரி ஹாட்’ஐ ரெகார்ட் பண்ணினா?’ இனிமேலாவது எது செஞ்சாலும் செல்போன்ல ஷூட் பண்ணாம ஜாக்கிரதையா செய்யுங்க பாஸ்.