இரு தினங்களுக்கு முன்பு நடந்த ‘தாண்டவம்’ பிரஸ்மீட்டில் மூன்று பாடல்களும் ட்ரெயிலரும் வெளியிடப்பட்டன. அதில் ஒரு பாடலில் விக்ரம், அனுஷ்காவை பார்த்து காதல் வயப்படுவது, அது அப்படியே போய் அவர்களது திருமணத்தில் முடிவதாக காட்டப்பட்டது கண்டு நிருபர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சி.
ஏற்கனவே விக்ரம் முகத்தில் ‘முதியவர் களை’ தாண்டவமாடிக்கொண்டிருக்க, ’’63 வயசுலயும் எப்பிடித்தான் நம்ம தமிழ்சினிமா கதாநாயகர்கள் மட்டும் வெக்கமில்லாம காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிறாங்களோ?’ என்று சற்று உரக்கவே சில நிருபர்கள் கமெண்ட் அடித்தனர்.
இந்த கமெண்டுகளை, பிரஸ்மீட்டுக்கு வந்திருந்த, விக்ரமின் நெருங்கிய அள்ளக்கையான, ஒரு வாரப்பத்திரிகை நிருபர் விக்ரமின் காதுகளுக்கு உடனே கொண்டுசெல்ல படபடப்புக்கு உள்ளான விக்ரம் , ‘’நான் எவ கூட எத்தனை வயசுல டூயட் பாடுனா இவனுகளுக்கு என்ன? வயித்தெரிச்சல் புடிச்சவனுங்க’’. என்று புலம்பித்தள்ளியபடியே, ‘நீங்க நம்ம பத்திரிகையில, இனி வயதுக்கு ஏற்றவேடங்களிலேயே நடிக்க விக்ரம் விருப்பம்னு ‘கவர்ஸ்டோரி’ ஒண்ணு போடுங்க. மத்தத அப்புறம் பாத்துக்கலாம்’’ என்றாராம்.
அப்ப இனிமே விக்ரமுக்காக கதை ரெடி பண்றவங்க ஏ.டி.எம் ல வேலை பாக்குற வயசான செக்யூரிட்டி, ரிடையரான காலேஜ் வாட்ச்மேன், பென்சன் கிடைக்காம டென்சனாகுற ஸ்கூல் ஹெட்மாஸ்டர் கேரக்டர்கள வச்சி,லவ்வு கிவ்வு எதுவும் இல்லாத கதை பண்ணுங்க. உடனே ஓ.கே.ஆயிடும்.