இயக்குநர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லி இயக்கிக் கொண்டிருக்கும் படம் ராஜாராணி. இதில் நயன்தாரா, ஜெய், ஆர்யா நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் கதையை கேள்விப்பட்ட போது பகீர் என்றிருக்கிறது. ஜெய் நயன்தாராவை காதலிக்கிறார். ஆர்யா வேறு ஒரு பெண்ணை
காதலிக்கிறார். விதிவசத்தால் ஆர்யா நயன்தாராவையும், ஜெய் ஆர்யாவின் காதலியையும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்த உண்மை தெரிய வந்ததும் பரீட்சையில் கேள்வித் தாள் மாறிய மாணவர்கள் பேப்பர்களை மாற்றுவது போல் ஜஸ்ட் மனைவிகளை மாற்றிக் கொள்கிறார்கள். தேட்ஸ் ஆல்.
சோ வாட். என்ன குடிமுழுகிப் போச்சு ? என்று உங்களில் பாதிப்பேர் கேட்பது காதில் விழுகிறது. நம்ம பாக்யராஜ் அந்த ஏழு நாட்களில் சொன்ன ‘எண்ட காதலி நிங்கள் மனைவியாகும் பஷே உங்கள் மனைவி என்னோட காதலியாகமாட்டா’ என்று கூறியதெல்லாம் பழங்கதையாகி விட்டது.
மேற்கத்திய நாடுகளில் இது 80களிலேயே வந்த நிலை. நம் நாட்டில் டைவர்ஸூகளும், கல்யாணத்துக்கு முன் அப்படி இப்படி இருப்பதில் தவறில்லை என்பதும் கடந்த சில வருடங்களாக எண்ணிக்கையில் அதிகமாகிவிட்டதால் மனைவியை மாற்றிக் கொள்ளும் முடிவுகளும் சாதாரணமாகத் தெரிய ஆரம்பிக்கிறது.
யாரும் இதைப் பற்றி கண்டுகொள்ளாத நிலையில் இந்து மக்கள் கட்சி என்கிற மதக் கட்சிதான் கடைசியில் நம் பாரம்பரியங்களைக் கருத்தில் கொள்ளுங்கள் என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மத்தவங்களுக்கெல்லாம் வேற என்ன கவலையோ?
எப்படியோ எல்லா தமிழர்களையும் இங்கிலிபீஸ் பேசும் அமெரிக்காக்காரர்களாக்கி அமெரிக்க தேர்தலுக்கு ஓட்டுப் போட வைக்காம இருந்தாச் சரி.