தமிழில் ஒரு படத்திலும் தலைகாட்டாவிட்டாலும் த்ரிஷாவின் பார்ட்-டைம் காதலர் என்ற முறையில், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தெலுங்கு நடிகர் ராணா கொஞ்சம் பிரபலமே. இந்த பலத்தை அதிகரிக்கும் பொருட்டு அஜீத்துடன் விஷ்ணுவர்த்தன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வரும் ராணா, அடுத்ததாக ‘மயக்கம் என்ன?” செல்வராகவன்
இயக்கத்தில், ரூ 85 கோடி மெகா பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு படம் ஒன்றில் நடிப்பதாக இருந்தார்.
தற்போது செல்வராகவன் இயக்கிவரும் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் தயாரிப்பாளர் பி.வி.பிரசாத்தே தயாரிப்பதாக இருந்த அந்தப்படம்,கடந்த சில தினங்களுக்கு முன்பு, மறுபரிசீலனையின்றி கிடப்பில் போடப்பட்டு விட்டதாம்.
காரணம் வழக்கம்போல் கதை கதையாம் காரணமாம்தான். சும்மா ஒரு நாலு வரியில் செல்வாவிடம் கதை கேட்டு ஓ.கே. சொல்லியிருந்த ராணா, அடுத்த சில சந்திப்புகளில் செல்வாவிடம் முழுக்கதையையும் கேட்பதற்கு பல்வேறு வழிகளில் முட்டிமோதி முயற்சித்தாராம். ‘ஏங்க நான் என்னங்க வச்சிக்கிட்டா வம்பு பண்றேன். பொதுவா ரிலீஸான என் படங்கள்லயே கதை எங்கடா இருக்குன்னு கண்ணுல வெளக்கெண்ணையை ஊத்தி ரசிகனுங்க தேடி பேஜாராவானுங்க. இவரு இன்னும் ஷூட்டிங் கூட கிளம்பாத படத்துக்கு கதையைக் கேட்க வந்துட்டாரு’ என்பது போலவே செல்வா முழிக்க, ‘’ ஏற்கனவே நம்ம மார்க்கெட் பரிதாபமா இருக்கு. இவரு வேற பழையபடி கதை இல்லாமயே ஷூட்டிங் போகப்பாக்குறாரு’ என்று படத்திலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம் ராணா.
பெரிய டைரக்டருங்க கிட்டயெல்லாம் கதைகேட்டு அழுகுணி ஆட்டம் ஆடுறியே ராணா, அட போண்ணா.