மவுன சாமியார் மணிரத்னம் எதை என்ன நோக்கத்தில் செய்கிறார் என்பதே பல நேரங்களில், அவரது படத்தின் கதை மாதிரியே புரியாத புதிர்.
தமிழ்ப்படமான ‘கடல்’காருக்கு இன்று சென்னையில் இல்லாமல், ஹைதராபாத்தில், விழா எடுத்து பட நாயகன், கார்த்திக்கின் மகன், கவுதமையும், பட நாயகி, ராதாவின் மகள், துளசியையும் அறிமுகப்படுத்தியிருப்பதே
ஒரு வித ‘எம்.பி.ஏ’ மணிரத்ன டெக்னிக் தான்.
இவர்கள் இருவரின் முகங்களையும் வெளியிடாமல் ரகஸியம் காத்து, அதையே மிகப்பெரிய பப்ளிசிட்டி ஸ்டண்டாக நடத்தி வந்த மணிக்கு இந்த முறை அவ்வளவாக மவுஸு இல்லை. இணையங்களில் வெளியான இவரது நாயக, நாயகியரின் சுண்டு விரல், முதுகு,பின்னந்தலை, பின்னல் தலைகளை யாரும் அவ்வளவாக ரசிக்கவில்லை.
இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் கவுதம், துளசி இருவரையும் அறிமுகப்படுத்த மணிரதனம் நடத்திய விழாவும் மிகப்பெரிய ஃப்ளாப்பாம்.
கவுதமாவது ஓரளவு தேற, துளசி பார்டர் மார்க்கில் கூட பாஸாகவில்லை.’ இதுக்கு இவளோட அக்கா கார்த்திகா எவ்வளவோ பரவாயில்லை’ என்று ஃபங்சனிலேயே பலர் கமெண்ட் அடித்தார்களாம்.
இந்த துளசியைப் பற்றி இதுவரை யாரும் வெளியே சொல்லாத ஒரு ரகஸியம் சொல்கிறோம், உங்க காதுகளைக் கொஞ்சம் கிட்டே கொண்டு வாருங்கள்.
பத்தாம் வகுப்பே படித்து வரும் துளசி,மணியின் படத்துக்கு செலக்ட் ஆகும்போது, சுமார் 82 கிலோ எடையுடன், வயசுக்கு மீறி வளர்ந்த, பெருத்த குட்டியாக இருந்தாராம். சம்பந்தப்பட்ட துளசி மற்றும் மணியின் மனையாள் சுகாசினி உட்பட யாருக்கும் துளசியை நாயகியாக்கப் பிடிக்கவில்லை. ஆனால் கார்த்திக் பையன், ராதா பொண்ணு இந்த ஸ்ட்ரேடஜியே படத்தின் பாதி வெற்றிக்குப் போதும் என்ற மணியின் மனக்கணக்கு, ராதாவின் பணக்கணக்கு ஆகிய இரண்டு மட்டுமே துருத்திக்கொண்டு நிற்க, படப்பிடிப்பு துவங்குவதற்கு சுமார் ஒரு மாதம் முன்பு, துளசியை அந்தமான் தீவுகளுக்கு அள்ளிக்கொண்டுபோய், அட்ராசிட்டிகள் பலபுரிந்து, அவரது எடையைக் குறைத்தார்களாம்.