கடந்த 24 மணிநேரமாக நீடித்து வந்த பல குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில், இன்று நண்பகல் 12.30 மணிக்கு பத்திரிகையாளர்களை அவசர அவசரமாக சந்தித்தார்.
’மிகக்குறுகிய கால அவகாசத்தில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால்,
இடநெருக்கடி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அதைப் பொறுத்துக்கொள்ளுங்கள். ‘ விஸ்வரூபம்’ ரிலீஸ் தேதியில் ஆளாளுக்கு மாற்றம் அறிவிக்கிறார்கள். அதை அறிவிக்கும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது.
டி.டி.ஹெச். தொழில்நுட்பத்திற்கு எவ்வளவு எதிர்ப்பு தெர்விக்கமுடியுமோ அவ்வளவையும் தெரிவித்துவிட்டார்கள். அவர்களுக்கு பயந்துகொண்டு ஒரு போதும் பின்வாங்கவில்லை. ஏனெனில் டி.டி.ஹெச் வெளியீடு என்பது எனது சுயநலம் அல்ல.
பொது நன்மை கருதி என்மீது அக்கரை கொண்ட சிலர் பட ரிலீஸுக்கு முந்தின தினம் அல்லாமல், ரிலீஸன்றே டி.டி.ஹெச்ச்சில் வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். அது குறித்தும் பரிசீலித்து வருகிறேன்.
பட ரிலீஸ் பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து இப்போது எதுவும் பேசவிரும்பவில்லை. தெலுங்கு, இந்தியிலும் ரிலீஸ் செய்வதால், அவர்கள் தரப்பிலிருந்து வரும் பிரச்சினைகள் குறித்தும் பரிசீலிக்கவேண்டியுள்ளது’ என்ற கமல் தமிழ்த்திரையுலகம், குறிப்பாக சக நடிகர்கள் தன் பக்கம் ஆதரவாக வரவில்லை என்பதற்காக மிகவும் வருந்துவதாகத் தெரிவித்தார்.