திருநெல்வேலியில் சில காலம், நம்ம விக்ரம் போலீஸ் யூனிஃபார்மில், பொறுக்கியாக அலைந்தாரே, அந்த ‘சாமி’ படத்தை, தற்போது இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இந்தியில் இயக்கிவருவது, தந்தியில் சிந்துபாத் தொடர்கதை வருகிறது’ என்று சொல்வதற்குச் சமமான பழைய சமாச்சாரம்.
டிபார்ட்மெண்டில் இருந்திருந்தால் கண்டிப்பாக ரிடயர்மெண்ட் கொடுத்திருப்பார்கள் எனும் வயதில் இருக்கும் சஞ்சய் தத், விக்ரம் வேடத்தில் நடிக்கும் அக்ரமத்தில் ஈடுபட,இனிமேல்தான் டூட்டியில் சேர அப்பாயின்மெண்டே வாங்கவேண்டும் என்கிற இளமையுடன் இருக்கும் பிராசி தேசாய் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், கடந்த வாரம் தமிழர் திருநாளன்று படப்பிடிப்பை தொடரவேண்டியதானதால், சஞ்சய் தத் உட்பட மொத்த யூனிட்டுடனும் பொங்கல் வைத்து, கரும்பு கடித்து உற்சாகமான பொங்கல் கொண்டாடியதாம் ‘போலீஸ்கிரி’ யூனிட்.
அது என்ன போலீஸ்கிரி?
முதலில், இந்தியிலும் அதே ‘சாமி’ டைட்டிலே இருக்கட்டும் என்று தொடங்கி, முந்தா நாள் வரை முந்நூத்தி சொச்ச டைட்டில்களைப் பரிசீலித்து கடைசியில் நேற்றுதான் படத்துக்கு ‘போலீஸ்கிரி’ என்று பெயர் வைத்தார்களாம்.
அது சரிங்க சஞ்சய் தத் பொங்கல் கிண்டி கரும்பு கடிக்கிற ஸ்டில்லைப்போடாம, எறும்பு பிராசிதேசாயோட ஸ்டில்லைப் போட்டிருக்கீங்களேன்னு டென்சன் ஆகாம 2, 3 ஐ க்ளிக் பண்ணுங்க.