இசை – விஜய் ஆண்டனி. இயக்கம் – சுந்தர்.சி
நான் படத்தில் ஹீரோவாக நடித்த பின்பு மீண்டும் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் படம். படத்தின் தலைப்பே கதமகராஜா என்று எந்த லாஜிக்கிலும் இல்லாத பெயராக இருப்பதால், படத்துக்கேற்றார் போல குத்துப்பாட்டுகள், கானா பாட்டு, வெஸ்டர்ன் குத்துப் பாட்டு என்று மூன்றே வகைகளில் படத்தின் ஐந்து பாடல்களும் அடங்கிவிடுகின்றன.
1. சிக்குபுக்கு சிக்கு ரயில் – சின்னப் பொண்ணு, பாடல் – அண்ணாமலை
கிராமியப் பாடகியின் குரலில் சின்னப் பொண்ணுவும் இன்னொரு பரிச்சயமான ஆண்குரலும் பாடியிருக்கும் கிராமத்து டைப் மாடர்ன் குத்துப் பாட்டு. ஹிட்டாகும் டைப்.
2. மை டியர் லவரு – விஷால், பாடல் – பா.விஜய்
கொலவெறிப் பாடலைத் தொடர்ந்து வந்திருக்கும் இன்னொரு தமிங்கிலீஷ் பாடல். பாடியிருப்பவர் நடிகர் விஷால். பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் நடித்த அதே கெட்டப்போடு வந்து இந்தப் பாடலைப் பாடியது போல அசத்தலாக பாடியிருக்கிறார். பா.விஜய் தமிழில் இங்கிலீஷைப் பொளந்து கட்டுகிறார். பாட்டின் தரம்? அதை ஏன் சார் கேக்குறீங்க. ஹிட் ரகம்.
3. நீதானா நீதானா – விஜய் ஆண்டனி. பாடல் – பா.விஜய்
சுமாரான பாடல். வெஸ்டர்ன் டைப்பில் விஜய் ஆண்டனி பாடுகிறார். ஹிப் ஹாப் பாடல் ரகம்.
4. சற்று முன்வரை – சந்தோஷ். பாடல்- அண்ணாமலை
வெஸ்டர்ன் டைப்பில் சந்தோஷ் பாடும் பாடல். ஏற்கனவே கேட்ட ஏதோ ஒரு ட்யூன்தான் என்றாலும் கேட்கும்படி இருக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு பிடித்த பாடல் இது.
5. தொம்பாக்கி – விஜய் ஆண்டனி. பாடல் – பா.விஜய்
விஜய் ஆண்டனியின் ஸ்பெஷல் ப்ராண்ட் பாட்டு இது எனலாம். போன படத்தில் ரசிகர்களை மக்கயாலா மக்கயாலா என்று பிதற்ற வைத்த விஜய் ஆண்டனி இப்பாடலில் தொம்பாக்கி தொம்பா என்கிறார். எந்த கண்டத்தில் பேசப்படும் மொழி இதுவோ ? ஏதோ ஆப்பிரிக்க ரெகே வகைப் பாடல்களை நினைவு படுத்துகிறது. பாட்டு ‘தொம்பாக்கி’யாலேயே தெம்பாகி ஹிட்டாகிவிடும்.
படத்தில் பாடல்கள் எழுதியுள்ள பா.விஜய்யும், அண்ணாமலையும் எதுகை மோனைக்கு பாட்டு அமைப்பாக எழுதியுள்ளார்கள் என்றாலும் கவிஞனின் கவிதை நயத்தை காணோம்.
விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் பெரும்பாலானவை கேட்கும்படி இருக்கின்றன. என்றாலும் க்ளாசிக்காய் நிலைக்கும் பாடல் எதுவும் இல்லை. மொத்தத்தில் மதகஜராஜா விஜய் ஆண்டனியின் அளவிற்கு ஒரு ஓ.கே. படம். படம் ஓடாவிட்டால் பாட்டுக்கள் அனைத்தும் மறுநாளே மறந்து போகப்படும்.
எந்தப் பக்குடும் ராஜூவாலாகா(படம் வரட்டும் பார்க்கலாம்).
-மருதுபாண்டி.