பாண்டி ஒலிபெருக்கி நிலையம், கோரிப்பாளையம், மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராசு மதுரவன். இவர் ஒரு செயின் ஸ்மோக்கர். தொடர்ந்து சிகரெட் குடித்துக் கொண்டேயிருப்பாராம் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட.
இவரது முதல் படம் பிரசாந்த் நடித்த பூமகள் ஊர்வலம். மெல்லிய குடும்பத்து உணர்வுகளை வைத்து எளிமையான திரைக்கதையால் கட்டிப்போடும் தன்மை கொண்ட அவரது படங்கள் அவருக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தன.
இவர் இயக்கவிருக்கும் அடுத்த படம் சொகுசுப் பேருந்து. ரேணிகுண்டாவில் நடித்த ஜானியும், சாட்டையில் நடித்த யுவனும் நடிக்க, கதாநாயகியாக பேராண்மை படத்தில் நடித்த லியாஸ்ரீ நடிக்கிறார். சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் ஒரு பஸ்ஸில் நடக்கும் சுவாராசியமான விஷயங்களைத் தொடர்ந்து செல்லும் கதை.
இப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்களில் தொடங்கவிருக்கிறது. இந்த நேரத்தில் ராசு மதுரவன் திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு வாய், உதடு, மற்றும் தொண்டையில் கேன்ஸர் தோன்றியுள்ளதை உறுதிப்படுத்தினார்கள்.
திரையுலகத்தினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் இந்த கேன்ஸர் அவர் தொடர்ந்து சிகரெட் குடித்துக் கொண்டேயிருந்ததாலேயே ஏற்பட்டதாம். கேன்ஸர் பாதிப்படைந்து அவசரச்சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ராசு மதுரவனின் வாழும் நாட்கள் எண்ணப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் புற்று நோயால் மரணமடைந்தார்.
திரையுலகினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்களது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.