கேரள அரசின் 2013ஆம் ஆண்டுக்கான சினிமா விருநதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த நடிகர் விருது ‘நார்த் 24 காதம்’ படத்தில் நடித்த பஹத் பாசிலுக்கும் ‘தக்கரியாயுடே கர்ப்பிணிகள்’ படத்தில் நடித்த லாலுக்கும் சேர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைக்கான விருது ‘ஆர்ட்டிஸ்ட்’ படத்தில் நடித்த ஆன் அகஸ்டினுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த படமாக ‘கிரைம் எண்889’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனராக ஆர்ட்டிஸ்ட் படத்தை இயக்கிய ஷ்யாம் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த இசையமைப்பாளராக அவுசேபத்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிறந்த நகைச்சுவை நடிகராக ஸ்வராஜ் வெஞ்ஞாரவூடு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சிறந்த பாடகராக கார்த்திக்கும் சிறந்த பாடகியாக வைகோம் விஜயலட்சுமியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். த்ரிஷ்யம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.