கமலுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்து சென்று மகள்களுடன் மும்பையில் வாழ்ந்து வரும் சரிகா நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். பின்பு கடந்த ஆண்டு ‘கிளப் 60’ என்ற இந்திப் படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்தார்.
பின்பு அமிதாப்பச்சனுடன் ‘ஷூ பைட்’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் படம் கைவிடப்பட்டது. இப்போது அவருக்கு மீண்டும் அமிதாப்புடன் ஒரு டி.வி. நெடுந்தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
35 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரை திரைப்பட இயக்குனர் அனுராக் கஷ்யப் இயக்கவிருக்கிறார். சரிகாவின் மகள்கள் இருவரும் சினிமாவில் நடிக்கக் கிளம்பிவிட்டபடியால் அவர்களைப் பின்தொடரும் வேலையை விட்டுவிட்டு தனது நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.