நடிகை டாப்ஸி ஹிந்தியில் நடித்து வரும் படம் ‘சஷ்மே பகதூர்’. இதையடுத்து அவர் ‘ரன்னிங் ஷாதி டாட் காம்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் இவருக்கும் பேட்மிண்டன் வீரர் மத்யாஸூக்கும் இடையே திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் வெளியாகின.
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் மறுத்திருக்கிறார் டாப்ஸி. “மத்யாஸை எனக்கு நன்றாகத் தெரியும். இதற்கு மேல் இதுபற்றி பேசவிரும்பவில்லை. எனது நடிப்பு பற்றிக் கேளுங்கள் சொல்கிறேன். எனது தனிப்பட்ட சொந்த வாழ்க்கை பற்றி எதுவும் கேட்காதீர்கள்.
என் திருமணம் பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. சினிமாவிலும் நான் இன்னும் நிறைய சாதிக்கவேண்டியிருக்கிறது. சினிமாவில் எனக்கு பின்புலமாக நடிகரோ, பெரிய நிறுவனமோ இல்லை. இன்னும் தொடர்ந்து நல்ல வேடங்கள் பலவற்றை ஏற்று நடிக்க விருப்பம். காதல், திருமணம் பற்றி எந்த நல்ல செய்திகளும் இப்போது இல்லை.”