நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போது பெரும்பான்மையான நடிகர்களும் நடிகைகளும் காசுபணம் சேர்ப்பதிலும் பிற்காலத்துக்கு ஏற்பாடுகளைச் செய்வதிலும் மட்டுமே குறியாயிருப்பார்கள். ஆனால் இப்போதே சமூகப் பணி செய்வதிலும் ஆர்வமாக இருப்பவர்களில் ஹன்ஸிகாவும் இருக்கிறார்.
வருடந்தோறும் தனது பிறந்த நாளன்று ஒரு ஏழைக் குழந்தையை புதிதாக தத்தெடுத்து வளர்க்கிறார். இவ்வாறாக இதுவரை 19 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். அவர்களுக்கான கல்வியிலிருந்து அனைத்து அடிப்படை வசதிகளையும் தானே செய்துகொடுக்கிறார்.
இப்போது பிள்ளைகளால் கைவிடப்படும் மற்றும் உறவுகளே இல்லாத முதியோர்களுக்கான இல்லம் ஒன்றையும் தொடங்க உத்தேசித்திருக்கிறார் ஹன்சிகா. ஹன்சிகாவின் பெற்றோரும் உறவினர்களும் அவரது சொந்த ஊரான மும்பையில் தான் துவங்கவேண்டும் என்று கூற, ஹன்ஸிகாவோ தனக்கு வாழ்வளித்தது தென்னிந்திய சினிமா என்பதால் இங்கேயே சென்னையில் அமைக்க விரும்புகிறாராம்.